சர்க்கரை நோயாளிகள் இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க!
செயற்கையான நிறமிகள் கலந்து சுவையூட்டப்பட்ட காபியை குடிப்பது ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.
ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதன் மூலம் நீரிழிவு நோய் உருவாகிறது, உலகில் பெரும்பாலன மக்கள் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகமானோருக்கு இருப்பதால் இப்போதெல்லாம் சர்க்கரை நோய் என்பது சாதாரணமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்நோய் வந்துவிட்டாலே நாம் முக்கியமாக செய்யவேண்டியது உணவு கட்டுப்பாடு, அதன் பின்னர் சில உடபிற்பயிற்சிகள் தான். முறையற்ற உணவு பழக்கம், உடல் உழைப்பின்மை, மரபணு போன்ற பல காரணங்களால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க நாம் முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அப்படி நாம் முறையாக உணவு பழக்கத்தை கடைபிடிக்கும்போது நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் நீரிழிவு நோயின் அளவு கட்டுக்குள் இருக்கும். ரத்த சர்க்கரையின் கட்டுக்குள் இருப்பதால் நமக்கு உடல் ரீதியாக எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
மேலும் படிக்க | பயத்தம் பருப்பின் அபூர்வ நன்மைகள்: பல நோய்களுக்கு தீர்வு காணலாம்
இப்போது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க எந்தெந்த உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்ளக்கூடாது என்பது குறித்து பார்ப்போம். வெள்ளை பிரெட் மற்றும் பாஸ்தா போன்ற உணவு வகைகளில் குறைந்த அளவே நார்ச்சத்தும், அதிகளவில் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளது. பொதுவாக நார்சத்து நிறைந்த உணவுகள் உடலில் அதிகமாக சர்க்கரை சேர்வதை தடுக்கிறது, ஆனால் இந்த உணவில் கார்போஹைட்ரேட் தான் அதிகமாகி உள்ளது. இந்த உணவுகளை நீங்கள் சாப்பிடுவதால் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். பொதுவாக தயிர் சாப்பிடுவது உடலுக்கு நல்லது தான், ஆனால் செயற்கையான சுவையூட்டப்பட்ட தயிர் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. இதில் நிறைந்துள்ள அதிகமான சர்க்கரை உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது.
காபியில் பலவித ஆரோக்கிய நன்மைகள் உள்ளது என்பது தெரிந்த ஒன்றுதான், ஆனால் செயற்கையான நிறமிகள் கலந்து சுவையூட்டப்பட்ட காபியை குடிப்பது விரைவில் ரத்த சர்க்கரையை உயர்த்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பானத்தில் அதிகளவு சர்க்கரை நிரம்பியுள்ளது. அடுத்ததாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளில் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது, இதனை நீரிழிவு நோயாளிகளில் சாப்பிடாமல் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும் சர்க்கரை சேர்க்கப்படும் பழச்சாறுகளை நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | Health Alert: காலி வயிற்றில் ‘இவற்றை’ சாப்பிடக் கூடாத சில உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ