இன்றைய காலகட்டத்தில், ஆரோக்கியமற்ற வழ்க்கை முறை காரணமாக, அதிகமான மக்கள் நீரிழிவு நோயின் பிடியில் சிக்கி வருகிறார்கள். நீரிழிவு நோயாளிகள், தங்கள் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மூலம் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த வித அலட்சியமும் செய்தால் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) சமீப காலகட்டத்தில் நடத்திய ஆய்வில், இந்தியாவில் உள்ள சுமார் 15.8 சதவீதம் பேர் இரத்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பலர் தங்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் தங்கள் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில், சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவு எகிறும் நிலையை தவிர்க்க விரும்பினால் என்னென்ன தவறுகளைச் செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.


நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய சில பழக்கங்கள்


1. டயட்டில் போதுமான நார்ச்சத்து இல்லாமல் இருப்பது


சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து நிறைந்த உணவு பல வழிகளில் முக்கியமானது. நீரிழிவு நோயை நிர்வகிக்க நார்ச்சத்து சார்ந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் மற்றும் ஆரோக்கியமான குடல்களை மேம்படுத்தவும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உதவும். முழு தானியங்கள், பழங்கள், உலர் பழங்கள், காய்கறிகள் மற்றும் விதைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவும்.


மேலும் படிக்க | உடம்பை பிட்டாக வைத்துக் கொள்ள ஜிம்முக்கு போக தேவையில்லை..! வீட்டிலேயே செய்யக்கூடிய 5 உடற்பயிற்சிகள்


2. உடல் பயிற்சி செய்யாமல் இருப்பது


சர்க்கரை நோயாளிகள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவும். போதுமான உடல் இயக்கம் இல்லாத நிலை, உடல் எடையை அதிகரிப்பதோடு, இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கும். நீரிழிவு நோயாளிகள் தினமும் நடைபயிற்சி, ஜாக் அல்லது யோகா செய்வது நல்லது. இருப்பினும், உடற்பயிற்சி மிகவும் கனமாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


3. அதிக ஜிஐ குறியீடு உணவுகளை உண்பது


உயர் கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜிஐ) கொண்ட உணவுகள் இரத்த சர்க்கரையை எகிற அதிகரிக்கும். மறுபுறம், குறைந்த ஜிஐ உணவுகள் உங்கள் குளுக்கோஸ் அளவுகளில் சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, இரத்தத்தில் குளுக்கோஸின் சீரான வெளியீட்டை உறுதிபடுத்த, உணவுகளின் ஜிஐ மதிப்பை சரிபார்க்கவும். குறைந்த ஜிஐ கொண்ட உணவுகளை தேர்ந்தெடுக்கவும்


4. பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது


பதப்படுத்தப்பட்ட இறைச்சி, கெட்ச்அப், கார்ன்ஃப்ளேக்ஸ் மற்றும் பிஸ்கட் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரைகள் அதிகம் உள்ளன. ஆரோக்கியமற்ற உணவாக இருப்பதைத் தவிர, இதுபோன்ற விஷயங்கள் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். எனவே உங்கள் பசியைப் போக்க, புரதம், நார்சத்து பிற ஊட்டச்சத்துக்களை நிறைந்த ஆரோக்கியமான வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள், இது பசியின் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தேவையற்ற சர்க்கரை மற்றும் உப்பு சாப்பிடும் நிலையையும் ஏற்படுத்தாமல் இருக்கும்.


5. அதிக மன அழுத்தம்


மன அழுத்தம் சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஏனெனில் இது இன்சுலின் உற்பத்தியைத் தடுக்கிறது. ஆகையால், நீரிழிவு நோயை தடுக்கவும், கட்டுக்குள் வைக்கவும் மன அழுத்தம் இல்லாமல், மனதை அமைதியா வைத்திருக்க முயற்சி செய்வது மிக அவசியம். நீங்கள் விரும்பினால், மன அழுத்தத்தைத் தவிர்க்க உங்கள் உணவிலும் மாற்றங்களைச் செய்யலாம். இது தவிர, மருத்துவரின் ஆலோசனையையும் அவ்வப்போது பெற வேண்டும். 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பப்பாளியுடன் சாப்பிடவே கூடாத 5 உணவுகள்.. அஜீரணம், வாயு, அசிடிட்டி எல்லாம் தீர்வாகும்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ