HMPV Virus Tested In Chennai: HMPV வைரஸ் தொற்று தற்போது சென்னையில் 2 குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டுள்ளது. தொடர் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புடன் இரு வேறு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கும், குஜராத்தில் 1 குழந்தைக்கும் HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
யார் யாரை அதிகம் தாக்கும்?
இந்தியாவில் முதலாவதாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 3 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து 8 மாத குழந்தைக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதேபோல குஜராத்தில் ஒரு குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதியானது. இந்நிலையில் சென்னையில் கிண்டி மற்றும் சேத்துபட்டு பகுதிகளில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில் 2 குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர் சளி, காய்ச்சல், இருமல் பாதிப்புடன் வந்த 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த HMPV வைரஸ் பாதிப்பு முற்றினால் நிமோனியா காய்ச்சல் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தைகளைப் போல முதியவர்களையும் HMPV வைரஸ் தாக்கக் கூடியது எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். நோய் எதிர்ப்பு குறைவாக இருப்போரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | தமிழக மக்களே உஷார்?.. HMPV வைரஸ் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு\
இருப்பினும் ஒரு சிலர் இந்த தொற்று குறித்து அதீத அச்சம் கொள்கின்றனர். சீனாவில் இந்த தொற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், மீண்டும் கொரோனாவை போன்று லாக்-டவுண் வருமோ எனவும் அச்சப்படுகின்றனர். மேலும் HMPV வைரஸ் புதிய வகை தொற்று என சிலர் கூறுகின்றனர்.
இது புதிய தொற்று இல்லை
ஆனால் இது உண்மையில்லை. இந்த HMPV தொற்று ஏற்கெனவே இருப்பதுதான் என்றும் புதிய வகை தொற்று ஏதும் இந்தியாவில் பரவவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், சீனாவில் பரவிவரும் தொற்றுதான் இங்கு பரவுகிறதா என்பதும் உறுதியாக தெரியாது. சீனா அங்கு பரவி வரும் HMPV வேரியண்ட் குறித்து தகவல் இதுவரை தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.
மக்கள் அச்சப்பட தேவையில்லை
அப்படியிருக்க மக்கள் யாரும் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இருமல், சளி, ஜலதோஷம், தும்மல் போன்ற பிரச்னை இருப்பவர்களிடம் இருந்து விலகி இருப்பதும், முடிந்தளவு சமூக இடைவெளியுடனும் முடிந்தால் சானிடைஸர் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் இதன் பரவலை தடுக்கலாம். குளிர்காலத்தில் வழக்கமாக பரவும் அனைத்து தொற்றுகள நீங்கள் இவ்வாறு தடுக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சீனாவில் தற்போதைய டிசம்பர், ஜனவரி காலகட்டத்தில் கடும் குளிர்காலம் நிலவும். இந்த காலகட்டத்தில் அங்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், ஆர்எஸ்வி மற்றும் HMPV தொற்றுகள் பரவுவது வாடிக்கைதான் எனவும் கூறப்படுகிறது. எனவே மக்கள் இதனை எண்ணி அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை, வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க | இந்தியாவிலும் பீதியை கிளப்பும் HMPV வைரஸ்... செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ