நீரிழிவு நோயாளிக்கு மாம்பழம்: மாம்பழம் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது, அதேபோல் பலரால் விரும்பப்படும் ஒரு பழமாகும். தற்போது நாடு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக மாம்பழ சீசன் நெருங்கி தொடங்கிவிட்டது. இதனிடையே மாம்பழம் ஒரு இனிப்பான பழம் என்பதால், சர்க்கரை நோயாளிகள் இது ஏற்ற பழமா என்கிற சந்தேகம் எழுவது இயல்பு. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை குறைந்த அளவில் உட்கொள்ளலாம் என்று ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து தரவுகளின்படி, ஒவ்வொரு மாம்பழத்திலும் (சுமார் 100 கிராம்) 15 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 14 கிராம் சர்க்கரை உள்ளது. எனவே, ஒரு துண்டு மாம்பழம் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம், மேலும் இது உங்களின் உடல் நிலைமையை மேலும் மோசமாக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாம்பழம் இரத்த சர்க்கரையை எவ்வாறு பாதிக்கிறது?
நீரிழிவு நோயாளிகளின் பொதுவான கேள்விகளில் ஒன்று, மாம்பழம் சாப்பிடலாமா என்பதுதான். பதில் ஆம், ஆனால் மாம்பழத்தை குறைந்த அளவில் சாப்பிடுவது அவசியமாகும். மாம்பழம் ஆரோக்கியமானது, ஆனால் மற்ற பழங்களைப் போலவே, அவை கார்போஹைட்ரேட்டுகளையும் கொண்டிருக்கின்றன. கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன, ஆனால் மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து சர்க்கரையை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதாவது மாம்பழம் சாப்பிட்ட பிறகு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இவை கட்டுப்படுத்தலாம். மேலும், மாம்பழம் நல்ல ஊட்டச்சத்து மதிப்பு, குறைந்த கிளைசெமிக் சுமை மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட ஒரு பழம் என்றும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.


மேலும் படிக்க | டயட் வேண்டாம்.. உடற்பயிற்சி வேண்டாம்... உடல் எடையை குறைக்க சூப்பரான வழிகள்!


நீரிழிவு நோயாளிகள் மாம்பழத்தை பாதுகாப்பாக சாப்பிடுவதற்கான சில குறிப்புகள்
* முழு பழுத்த மாம்பழத்தை ஒப்பிடும்போது கொஞ்சம் பச்சை மாம்பழத்தை சாப்பிடுங்கள். மாம்பழம் தயாரிக்கும் போது அதிக சர்க்கரை காணப்படுவதில்லை, எனவே அது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.


* மாம்பழத்துடன் தயிர், பனீர் அல்லது மீன் போன்ற புரத மூலங்களைச் சாப்பிடுவது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.


* மாம்பழச்சாற்றில் சர்க்கரை கலந்து குடிப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். எனவே, நீங்கள் மாம்பழ ஜூஸ் குடிக்க விரும்பினால், எச்சரிக்கையுடன் குடிக்கவும், சர்க்கரை போட்டு குடிப்பதை தவிர்க்கவும்.


* மாம்பழங்களை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இன்சுலின் அளவைக் குறைக்கலாம்.


மாம்பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்?
காலை நடைப்பயணத்திற்குப் பிறகு, உடற்பயிற்சிக்குப் பிறகு மற்றும் உணவுக்கு இடையில் மாம்பழம் சாப்பிட சிறந்த நேரம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | முதுகு வலிக்கு 'குட் பை' சொல்ல இந்த 5 வழிகளை பின்பற்றுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ