Diabetes Symptoms: இந்த 5 அறிகுறிகள் இருந்தால், உடனடியாக ரத்த சர்க்கரை அளவை செக் செய்யவும்
Early Symptoms of Diabetes: நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியவில்லை என்றால், அது உயிருக்கு ஆபத்தானதாக மாறலாம். சில அறிகுறிகளின் மூலம் நீரிழிவு நோயை எளிதாக கண்டறியலாம்.
சர்க்கரை நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி: இன்றைய பரபரப்பான வாழ்க்கையிலும், பிஸியான வாழ்க்கை முறையிலும் நீரிழிவு நோய் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. நீரிழிவு நோய் என்பது வாழ்நாள் முழுவதும் நீடித்து வரும் நோய் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது வகை 1 மற்றும் வகை 2 என இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. இந்த நோயை சரியாகக் கையாளவில்லை என்றால், அது வேறு பல உடல் உபாதைகளை உண்டாக்கும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, அதன் அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம்.
நீரிழிவு நோயின் அறிகுறிகளை எவ்வாறு தெரிந்துகொள்வது?
1. அடிக்கடி பசி எடுப்பது
நீரிழிவு நோயாளிகள் மீண்டும் மீண்டும் பசி எடுப்பது போன்ற உணர்வை பெறுகிறார்கள். ஒருவருக்கு அடிக்கடி பசி எடுத்தால், தாமதிக்காமல், அவர் உடனடியாக உடல்நலப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
2. தணியாத தாகம்
ஒருவரது தொண்டை மீண்டும் மீண்டும் மிகவும் வறண்டு போனால், தண்ணீர் குடித்தாலும், தாகம் தணியாமல் இருந்தால், அவர் கண்டிப்பாக தனது உடல் சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். தணியாத தாகம் நீரிழிவு நோய்க்கான ஒரு மிகப்பெரிய அறிகுறியாகும்.
3. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
இரவு நேரங்களில், நான்கு அல்லது ஐந்து முறை சிறுநீர் கழிக்க எழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், உடல் சர்க்கரை அளவை பரிசோதித்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் இது நீரிழிவு நோயின் பெரிய அறிகுறியாகும்.
மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை கரைக்கும் 3 மேஜிக் பானங்கள்
4. எடை இழப்பு
ஒருவருக்கு திடீரென உடல் எடை வேகமாகக் குறைய ஆரம்பித்தால், அது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆகையால், அடிக்கடி உடலில் ஏற்படும் எடை மாற்றங்களை கவனம் கொண்டு, திடீர் எடை இழப்பு இருந்தால், எச்சரிக்கையாக உடல் சர்க்கரை அளவை சரிபார்ப்பது நல்லது.
5. சோர்வாக இருப்பது
10 முதல் 12 மணி நேரம் வரை களைப்படையாமல் உழைத்த ஒருவர், 8 மணி நேரம் வேலையிலேயே சோர்வடையத் தொடங்கினால், சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதுவும் நீரிழிவு நோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
நீரிழிவு நோயின் அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்
முதலில் அறிகுறிகளுக்காகக் காத்திருக்காமல், அனைவரும் 30 வயதைத் தாண்டிய பிறகு, சர்க்கரை நோய் இருக்கிறதா என்று அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது மிகவும் முக்கியமாகிவிட்டது. நீரிழிவு நோயின் அறிகுறிகள் இருப்பதாக தோன்றினால், தாமதமின்றி உடல் சர்க்கரை அளவை உடனே பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நீரிழிவு நோயை சரியான நேரத்தில் கண்டறியாமல் விடுவதும், அறிகுறிகள் இருந்தும் அவற்றைப் புறக்கணிப்பதும் ஆபத்தானதாக முடியலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கோவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR