Belly Fat: தொப்பையை கரைக்கும் 3 மேஜிக் பானங்கள்

நம்மில் பெரும்பாலோர் உடல் எடையை குறைக்கவும் தொப்பையை குறைக்கவும், யோகா  உடற்பயிற்சி முதல், எடை இழப்பீற்கான  டயட் வரை பலவற்றை கடைபிடிக்கிறோம். ஆனால், சில சமயங்களில் நமது முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 29, 2022, 03:26 PM IST
Belly Fat: தொப்பையை கரைக்கும் 3 மேஜிக் பானங்கள் title=

தொப்பையை கரைக்கும் மேஜிக் ஜூஸ்:  நம்மில் பெரும்பாலோர் உடல் எடையை குறைக்கவும் தொப்பையை குறைக்கவும், யோகா  உடற்பயிற்சி முதல், எடை இழப்பீற்கான  டயட் வரை பலவற்றை கடைபிடிக்கிறோம். ஆனால், சில சமயங்களில் நமது முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை.

தற்போதைய வாழ்க்கை முறையில், அதிக உடல் எடை பிரச்சனை என்பது பொதுவான பிரச்சனையாகி விட்டது. இதனால் நமக்கு பல ஆரோக்கிய பிரச்சனைகள் வந்து சேருகின்றன. உடல் பருமன் என்பது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் சில கெட்ட பழக்கங்களால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் என்றால் மிகை இல்லை. உங்கள் எடை கட்டுக்குள் இல்லை என்றால், உடலின் மெட்டபாலிசம் சரியாக இல்லை என்றும் அர்த்தம்.

உடல் எடையையும் தொப்பையையும் கரைக்கும்  3 மேஜிக் பானங்கள் 

பிஸியான வாழ்க்கையில் பல சமயங்களில் ஜிம், எக்சர்சைஸ் அல்லது ஒர்க்அவுட்டிற்கு நம்மால் நேரத்தை ஒதுக்க முடியவதில்லை. ஆனால் இப்போது அதற்கு டென்ஷன் தேவையில்லை. உடல் எடையை வேகமாகக் குறைக்கும் சில அற்புதமான பானங்கள் உள்ளன. இவற்றை வீட்டில் தயார் செய்வதும் மிகவும் எளிதானது. 

1. மசாலா மோர்

உங்கள் தினசரி உணவில் மோர் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும், ஏனெனில் இது உடல் எடையை குறைக்கும் அருமருந்தாகும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் கலோரிகள் மிகவும் குறைவு, வயிற்றை குளிர்வித்து, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனை தினமும் குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பு கரைய ஆரம்பிக்கும். மோரில் சர்க்கரை முற்றிலும் இல்லை, சர்க்கரை  உடல் பருமனை அதிகரிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதிலும் அதில் வறுத்து பொடித்த ஜீரகத்தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்தால் அதை போல் எடையை குறைக்கும் மேஜிக் பானம் இல்லை எனலாம்.

மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வு, மன பாரத்தை நீக்கும் அற்புத மூலிகைகள்

2. துளசி விதைகள் கலந்த தண்ணீர்

 தொப்பை கொழுப்பை வேகமாக கரைக்க விரும்பினால், துளசி விதைகளை உட்கொள்வது உங்களுக்கு விரும்பிய பலனைத் தரும். இது பொதுவாக சப்ஜா விதைகள் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த விதையை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுப்பதில்லை, எடையும் குறைய ஆரம்பிக்கும்.

3. எலுமிச்சை கலந்த சூடான நீர் 

காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால், தொப்பையை வேகமாக குறைக்கலாம். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைவில்லாமல் இருப்பதோடு மட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுக்கள் விரைவில் வெளியேறும். இந்த பானம் மூலம் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இது உடல் எடையை குறைய ஒரு முக்கிய காரணம். எலுமிச்சையில் ஃபிளாவனாய்டுகள், வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய கூறுகள் உள்ளன, அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News