சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்

Diabetes Patients Avoid Foods: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய நோயாளிகள் சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 23, 2022, 11:32 AM IST
  • சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டியவை
  • நீரிழிவு நோயாளிகள் உணவு முறை
  • சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி
சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம் title=

மாறிவரும் வாழ்க்கை முறையின் காரணமாக, அனைத்து வகையான பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் மக்கள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் எதிர்காலத்தில் உங்கள் பிரச்சினைகள் அதிகரிக்கலாம். தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் பெரும்பாலான மக்கள் நீரிழிவு போன்ற கொடிய நோய்களை எதிர்கொள்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், இந்த நோயாளிகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொண்டு, எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக் கூடாது என்பதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.  எனவே, சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

துரித உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
ஃபாஸ்ட் ஃபுட் உடல் நலத்திற்கு நல்லதல்ல என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் பிஸியான வாழ்க்கையில் பெரும்பாலான மக்கள் துரித உணவுகளை சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் ஆளாகிறார்கள். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் துரித உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு எந்த விதமான நோய்களும் வராமல் இருக்க, ஆரோக்கியமான உணவுகளை உண்ண முயற்சி செய்யுங்கள்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட வேண்டாம்
பொதுவாக நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்ணுவதை தவிர்க்க வேண்டும். உண்மையில், இதில் பீட்டா கரோட்டின் உள்ளது, இதன் காரணமாக அதன் கிளைசெமிக் குறியீடு அதிகமாக உள்ளது. இதனுடன், இதில் கார்போஹைட்ரேட் அளவும் அதிகமாக உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கச் செய்யும். எனவே, நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடக்கூடாது.

மேலும் படிக்க | டீ குடிக்கும்போது இதை மட்டும் சாப்பிடவே கூடாது

பச்சை பட்டாணி இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்
நீரிழிவு நோயாளிகள் பச்சைப் பட்டாணியை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட்டின் அளவு அதிகமாக இருப்பதால் சர்க்கரையின் அளவை அதிகரிக்கலாம். ஆகையால் பச்சை பட்டாணியை உங்கள் உணவில் சேர்க்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

சோளத்தை சாப்பிட வேண்டாம்
நோயாளிகள் சில காய்கறிகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் சில காய்கறிகளில் மாவுச்சத்து உள்ளது. உதாரணமாக, நீரிழிவு நோயாளிகள் சோளத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஜவ்வரிசியால் கிடைக்கும் ஏகப்பட்ட நன்மைகள்: கண்டிப்பா அடிக்கடி சாப்பிடுங்க 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News