நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படும், அப்படி ஏற்படும் உடல் பாதிப்புகளை தவிர்க்க நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்தாலும் அது ஆபத்தை ஏற்படுத்தும், சர்க்கரையின் அளவு  குறைந்தாலும் உடலுக்கு ஆபத்து ஏற்படும்.  ரத்த சர்க்கரை உயர்வால் உடலில் இதயம், நரம்புகள், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிப்படையும், அதுவே உடலில் சர்க்கரை அளவு குறையும்பொழுது குழப்பம், தலைச்சுற்றல், கடுமையான பசி, பதட்டம், மனநிலை மாற்றங்கள் மற்றும் கோமா அல்லது மரணம் கூட ஏற்பட நேரிடும்.  சர்க்கரை அளவு 70 mg/dl க்கு குறைவாக இருந்தால், உடனடியாக அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுபோன்ற அறிகுறிகளை உணரும்போது உடனடியாக குளுக்கோஸ் மாத்திரைகள், மிட்டாய் அல்லது பழச்சாறு போன்ற எளிய சர்க்கரை பொருட்களை சாப்பிடலாம், பின்னர் குடும்பத்தினரிடம் தெரிவித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.  முறையான உணவு கட்டுப்பாடு மற்றும் பயிற்சிகள் செய்து உடலில் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், சர்க்கரையின் அளவு கூடவோ அல்லது குறையவோ கூடாது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.  இப்போது உடலில் ரத்த சர்க்கரை அளவு குறைந்தால் நீங்கள் எந்த மாதிரியான அறிகுறிகளை உணர்வீர்கள் என்று பார்க்கலாம். நன்கு சாப்பிட்ட பிறகும் திடீரென்று பட்டினி கிடப்பது போல் அதிகளவிலான ஒரு உணர்வு ஏற்பட்டால்  உங்கள் உடலில் இரத்தச் சர்க்கரைக் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம், அதற்கு நீங்கள் சிற்றுண்டியுடன் 15 மற்றும் 20 கிராம் அளவு கார்போஹைட்ரேட் மற்றும் உணவின் போது 40 முதல் 65 கிராம் வரை சாப்பிடுவது நல்லது.



மேலும் படிக்க | உடல் எடை அதிகரிப்பால் அவதியா? இந்த சுவையான சாலட் சாப்பிட்டு எடையை குறைக்கலாம் 


குளுக்கோஸ் அளவு மிகக் குறையும்போது உங்கள் உடல் எபிநெஃப்ரின் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களை வெளியிடுகிறது, இது கல்லீரலுக்கு அதிக சர்க்கரையை இரத்தத்தில் வெளியிடுவதற்கு  செய்தி அனுப்புகிறது, இதனால் உங்களுக்கு திடீரென்று கவலை உணர்வு ஏற்படுகிறது.  மேலும் நீங்கள் வழக்கத்தை விட மாற்றாக நடந்துகொள்வீர்கள் எரிச்சல், பிடிவாதம் மற்றும் மனச்சோர்வு போன்றவையும் இதனால் ஏற்படும்.  மூளை சிறப்பாக செயலாற்ற ரத்த சர்க்கரை உதவுகிறது, இது குறையும் பட்சத்தில் உங்கள் மூளை சரியாக செயல்படாமல் போகலாம், அதனால் உங்களால் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகும்  உருவாகும்.  உடலில் 40mg/dL க்கும் கீழே சர்க்கரை குறையும் போது உங்கள் பேச்சில் குளறுபடி ஏற்படும் வாய்ப்புள்ளது.


மேலும் படிக்க | ஃபோலிக் அமிலம் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்பவரா? கோவிடினால் அதிக ஆபத்து! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ