சர்க்கரை நோயாளிகள் இந்த உணவுகளுக்கு கண்டிப்பாக NO சொல்லவும்
நீரிழிவு அபாயத்தை அதிகரிக்க உதவும் சில உணவுகள் பற்றி அறிந்து கொண்டு, இவற்றை நீரிழிவு நோயாளிகள் உண்ணாமல் தவிர்ப்பது சிறந்தது.
நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். இல்லையேல் உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கக்கூடும். சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதற்கு மருந்துகள் எடுத்துக் கொண்டாலும், உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பிட்ட சில உணவுகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் நீரிழிவு அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது. ஆனால், சில உணவுகள் இதன் அபாயத்தை அதிகரிக்க உதவுகிறது. நீரிழிவு அபாயத்தை அதிகரிக்க உதவும் சில உணவுகள் பற்றி அறிந்து கொண்டு, இவற்றை நீரிழிவு நோயாளிகள் உண்ணாமல் தவிர்ப்பது சிறந்தது.
இனிப்பான சோடா வகைகள்
இனிப்பான சோடா வகைகள் டைப் 2 நீரிழிவு ஆகியவை ஏற்படுவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. எனவே, நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இனிப்பு மிகுந்த சோடா பானங்களை தவிர்ப்பது நல்லது. இவற்றுக்கு பதிலாக க்ரீன் டீ அருந்தலாம்
உருளைக்கிழங்கு
நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை எந்த வடிவத்தில் உட்கொண்டாலும் அது உடலுக்கு தீங்கை உண்டாக்குகிறது. உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச்சில் க்ளுகோஸ் மிக அதிகமாக உள்ளது. இந்த ஸ்டார்ச் இரத்த ஓட்டத்தில் விரைவாக உறிஞ்சப்பட்டு இரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. எனவே, உருளைக்கிழங்கிற்கு நோ சொல்லவும்.
பிரட்
இன்றைய அவசர யுகத்தில் மிகவும் கை கொடுக்கும் உணவு பிரட். இது நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு உணவாக இருந்தாலும் வெள்ளை பிரட் ஒரு சிறப்பான தேர்வு அல்ல. வெள்ளை பிரட் மைதா கொண்டு தயாரிக்கப்படுவதால் இதில் நார்ச்சத்து மற்றும் ஊட்டசத்துகள் மிக குறைவாக இருக்கும். பிரெட் இன்சுலின் வெளியீட்டை ஊக்குவித்து இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகள் வெள்ளை பிரெட்டுக்கு , மாற்றாக மல்டி கிரைன் பிரட் அல்லது கோதுமை பிரட் உட்கொள்ளலாம். இப்போது ராகி பிரட்டும் கடைகளில் கிடைக்கிறது. அதோடு, பிரட் உடன் காய்கறிகள் , பீன்ஸ் போன்றவற்றை சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR