Weight Loss Tips: மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக, பொதுவாக எடை வேகமாக அதிகரிக்கும். இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. இந்தியா மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள பலர் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக அதிக கொலஸ்ட்ரால், அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதை கட்டுப்படுத்த கட்டாயமாக உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும், இல்லையெனில் பிரச்சனை அதிகரிக்கலாம். உடல் எடையை குறைக்க பலரும் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். கடுமையான உடற்பயிற்சிகள், உணவு கட்டுப்பாடு என பல விதங்களில் உடையை குறைக்க முயல்கிறார்கள். ஆனால், இதனால் நினைத்த பலன் கிடைப்பது சிலருக்குத்தான். பலருக்கு இதற்கான நேரமும் இருப்பதில்லை. எனினும், சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடயை குறைக்கலாம். அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையை குறைக்கும் ஸ்நாக்ஸ் (Snacks For Weight Loss):


பொதுவாக தொப்பை கொழுப்பை கரைக்க, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஸ்னாக்ஸ் சாப்பிடுவதை தவிர்ப்பதுண்டு. ஆனால், சில ஸ்னாக்ஸை சாப்பிட்டே உடல் எடையை குறைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் எடையைக் குறைக்க நீங்கள் விரும்பி சாப்பிடும் பொருட்களை சாப்பிடாமல் விட்டுவிட்டீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்குத்தான். சில சுவையான சிற்றுண்டிகளை சாப்பிட்டும் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க உதவும் அப்படிப்படட் அட்டகாசமான சில ஸ்னாக்ஸ் பற்றி இந்த பதிவில் காணலாம். 


எடை இழப்புக்கு சுவையான ஸ்நாக்ஸ்


முளைத்த கொண்டைக்கடலை சாட் (Chickpeas For Weight Loss)


நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், முளைத்த கொண்டைக்கடலையில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாட் செய்து உட்கொள்ளலாம். இதில் ஏராளமான புரதச்சத்து கிடைக்கும். இது சுவையாக இருப்பதுடன், உங்கள் எடையைக் குறைக்கவும் உதவும்.


மேலும் படிக்க | இந்த இறைச்சி உணவுகள் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும்! தவிர்க்க வேண்டிய மாமிசங்கள் எவை?


மசாலா ஓட்ஸ் (Oats For Weight Loss)


மசாலா ஓட்ஸ் மிகவும் சுவையான மற்றும் பலருக்கு பிடித்தமான ஆரோக்கியமான சிற்றுண்டிகளில் ஒன்றாகும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உங்கள் எடை குறையத் தொடங்கும் என்பது ஆச்சரியமான உண்மையாகும். சுவையான உணவுகளும் நம் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். 


காய்கறி உப்மா 


மாலை நேர சிற்றுண்டியில் காய்கறிகள் போட்ட உப்புமாவையும் சேர்த்துக்கொள்ளலாம். இது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது உண்பதற்கு மிகவும் இலகுவானது மற்றும் உங்கள் உடலை இலகுவாக வைத்திருக்கும்.


அவல் 


அவல் மிகவும் லேசான உணவாகும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமானால், தினமும் ஒரு வேளை வெறும் அவல் பண்டங்களை சாப்பிடலாம். இது சுவையாகவும், உடல் எடையை அதிகரிக்காமலும் இருக்கும். போஹாவில் சில காய்கறிகள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து உப்புமா செய்து சாப்பிடலாம். அல்லது பாலில் ஊற வைத்தும் உட்கொள்ளலாம். 


வறுத்த கொண்டைக்கடலை


வறுத்த கொண்டைக்கடலை எடையைக் குறைப்பதில் பெரும் நன்மை பயக்கும். இதில் நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதால், வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதோடு, அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்கிறது.  


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | எலும்பு அடர்த்தி குறைந்திருக்கிறதா? இந்த உணவுகள் பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்துகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ