யூரிக் அமிலத்தைக் குறைக்கும் உணவுகள்: யூரிக் அமிலம் அதிகரிப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதில் மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை நம் உடலால் அகற்ற முடியாவிட்டால், உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும். நமது உடலில் யூரிக் அமிலம் கட்டுப்பாடில்லாமல் போகும் போது, ​​மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் பல உறுப்பு செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அதிக யூரிக் அமிலத்தை குறைக்கக்கூடிய சில உணவுகளை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். அப்படிப்பட்ட உனவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த உணவுகளை சாப்பிட்டால் யூரிக் அமிலம் குறையும்


1. தக்காளி
தக்காளி நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி ஆகும் . அந்த வகையில் தக்காளியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க இது பெரிதும் உதவுகிறது.


மேலும் படிக்க | சர்க்கரை நோய் இருப்பவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா? உண்மையும்.. பலன்களும்..!


2. ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. தினமும் 500 மி.கி வைட்டமின் சி அடிப்படையிலான உணவை உட்கொண்டால், உடலில் இருக்கும் யூரிக் அமிலத்தின் அளவு வெகுவாகக் குறையும். ஆரஞ்சு தவிர, நீங்கள் எலுமிச்சை சாப்பிடலாம், இது மிகவும் நன்மை பயக்கும்.


3. நார்ச்சத்து அடிப்படையிலான உணவு
உடல் எடையை குறைக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுகிறோம், ஆனால் இவை யூரிக் அமிலத்தின் அளவை குறைக்கும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இத்தகைய உணவுகளில் முழு தானியங்கள், ஓட்ஸ், ப்ரோக்கோலி, செலரி மற்றும் பூசணி ஆகியவை அடங்கும்.


4. செர்ரி
செர்ரியை கேக் அல்லது அழகாக தோற்றமளிக்கும் உணவில் வைப்பதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள், ஆனால் அது யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவும். மேலும் இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.


5. டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் உள்ள தியோப்ரோமைன் ஆல்கலாய்டு அதிக யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுகிறது. டார்க் சாக்லேட்டில் சர்க்கரை இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள், இல்லையெனில் அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வெறும் 1 டீஸ்பூன் இந்த எண்ணெய் போதும்..முடி அடர்த்தியா வளரும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ