வெறும் 1 டீஸ்பூன் இந்த எண்ணெய் போதும்..முடி அடர்த்தியா வளரும்

Hair Care Tips: இன்று உங்களுக்காக விளக்கெண்ணெய் வைத்து ஹேர் பேக் எப்படி செய்வது என்பதை கூராயுள்ளவம். இந்த எண்ணெயின் ஹேர் பேக் கற்றாழையின் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது, எனவே இந்த இரண்டு பொருட்களின் கலவையும் உங்கள் தலைமுடியை அடர்த்தியாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 8, 2023, 01:45 PM IST
  • விளக்கெண்ணெய் ஹேர் பேக் செய்வது எப்படி.
  • தலைமுடியை அடர்த்தியாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
வெறும் 1 டீஸ்பூன் இந்த எண்ணெய் போதும்..முடி அடர்த்தியா வளரும் title=

விளக்கெண்ணெய் ஹேர் பேக் செய்வது எப்படி: இன்றைய வாழ்க்கை முறை, தவறான உணவுப்பழக்கம், அதிகரித்து வரும் மாசுபாடு போன்றவற்றால், முடி வளர்ச்சியடைய முடியாமல் போகிறது. இதன் காரணமாக, உங்கள் தலைமுடி வறண்டு, உயிரற்றதாக மாறி, முடி உதிர்தல் மற்றும் வழுக்கை போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், மீண்டும் தலையில் முடி வளர, நீங்கள் விலையுயர்ந்த மற்றும் வலிமிகுந்த சிகிச்சைக்கு செல்ல வேண்டி இருக்கிறது. அதனால்தான் இன்று உங்களுக்காக விளக்கெண்ணெய் ஹேர் பேக்கைக் கொண்டு வந்துள்ளோம். விளக்கெண்ணெய் ஹேர் பேக் கற்றாழையின் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது, எனவே இந்த இரண்டு பொருட்களின் கலவையும் உங்கள் தலைமுடியை அடர்த்தியாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த செய்முறையை முயற்சிப்பதன் மூலம், உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கும், எனவே விளக்கெண்ணெய் ஹேர் பேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்....

விளக்கெண்ணெய் ஹேர் பேக் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்-

கற்றாழை ஜெல் 3-4 தேக்கரண்டி
விளக்கெண்ணெய் ஒரு டீஸ்பூன்

மேலும் படிக்க | பப்பாளி சாப்பிட்டால் வரும் தீராத நோய்கள் - பக்கவிளைவுகள் இதோ..!

விளக்கெண்ணெய் ஹேர் பேக் செய்வது எப்படி?
விளக்கெண்ணெய் ஹேர் பேக் செய்ய, முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதில் புதிய கற்றாழை ஜெல் மற்றும் ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்க்கவும்.
அதன் பிறகு, இந்த இரண்டு பொருட்களையும் நன்கு கலக்கவும்.
இப்போது உங்கள் விளக்கெண்ணெய் ஹேர் பேக் தயார்.

விளக்கெண்ணெய் ஹேர் பேக்கை எப்படி பயன்படுத்துவது?
உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடி நுனியில் விளக்கெண்ணெய் ஹேர் பேக்கை நன்கு தடவவும்.
இந்த பேக்கை முடியில் சுமார் 20-30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
அதன் பிறகு, லேசான ஷாம்பூவின் உதவியுடன் தலைமுடியைக் கழுவவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அடிவயிற்று சதை சட்டுனு குறைய தினமும் இந்த மேஜிக் டீ குடிங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News