யூரிக் அமிலம் அதிகரித்தால் கால்களில் இந்த அறிகுறிகள் தெரியும்: இப்படி கட்டுப்படுத்தலாம்

Uric Acid Causes: தினமும் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் வினிகரை தண்ணீரில் கலந்து சாப்பிடுவது யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைத்திருப்பதுடன் செரிமானமும் சிறப்பாக இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 21, 2022, 06:55 PM IST
  • ஆலிவ் எண்ணெய் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவுவதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
  • ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்-ஈ நிறைந்துள்ளது.
  • இது இயற்கையாகவே யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்துகிறது.
யூரிக் அமிலம் அதிகரித்தால் கால்களில் இந்த அறிகுறிகள் தெரியும்: இப்படி கட்டுப்படுத்தலாம் title=

யூரிக் அமிலம்: பாதங்களில் அதிக பிரச்சனை ஏற்படும் சில நோய்களில் யூரிக் அமிலத்தின் அதிகரிப்பும் மிக முக்கியமாகும். யூரிக் அமிலத்தின் அதிகரிப்பு நடப்பதில் சிரமம் மற்றும் கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு இரசாயனமாகும். இது அனைவரின் உடலிலும் உற்பத்தி செய்யப்படுகிறது, சிறுநீரகங்களால் உடலில் இருந்து வடிகட்டி வெளியேற்றப்படுகிறது. உடலில் பியூரினின் அளவு அதிகமாகி, சிறுநீரகத்தால் வடிகட்ட முடியாமல் போகும் போது, ​​இந்த அமிலம் மூட்டுகளில் குவிந்து கடுமையான வலியை உண்டாக்குகிறது.

யூரிக் அமிலத்தின் உருவாக்கத்தின் அதிகபட்ச விளைவு பாதங்களில் உள்ளது. கால்களில் விறைப்பு, மூட்டு வலி மற்றும் வீக்கம் ஆகியவை யூரிக் அமிலம் அதிகரிப்பதால் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளாகும். யூரிக் அமிலம் உருவாகும்போது, ​​அது மூட்டுகளை அடைத்து, கணுக்கால் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆயுர்வேதத்தின் படி, சிட்ரஸ் பழங்களை அதிகமாக உட்கொள்வது யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது. யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி மிக முக்கியமாகும். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் உணவுமுறை மூலம் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம்.

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த ஆப்பிள் வினிகர்

ஆப்பிள் வினிகர் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினமும் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் வினிகரை தண்ணீரில் கலந்து சாப்பிடுவது யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைத்திருப்பதுடன் செரிமானமும் சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | உடல் எடை உடனடியா குறையணுமா? இரவில் இந்த மேஜிக் பானங்களை குடிங்க! 

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த ஓம விதைகள் 

ஆயுர்வேதத்தின் படி, யூரிக் அமிலத்தை குறைக்க, ஓமம் ஒரு சிறந்த வழியாகும். இதனை உட்கொள்வதால் கால்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஓமத்தை உட்கொள்வதால் வயிற்று பிரச்சனையும் குணமாகும்.

அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் 

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, அதிக யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த விரும்பினால், அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக தண்ணீர் குடிப்பதன் மூலம் யூரிக் அமிலம் நீர்த்தப்படுகிறது. இதன் காரணமாக சிறுநீரகம் உடலில் இருந்து நச்சுகளை எளிதில் அகற்றும்.

ஆலிவ் எண்ணெய் 

ஆலிவ் எண்ணெய் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவுவதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்-ஈ நிறைந்துள்ளது. இது இயற்கையாகவே யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்துகிறது. யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த, ஆலிவ் எண்ணெய் கொண்டு சமைக்கலாம். 

7-8 மணி நேரம் தூங்குங்கள்

மோசமான உணவுப்பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக உருவாகும் யூரிக் ஆசிட் நோய்க்கான காரணங்களில் தூக்கம் மிகவும் முக்கியமானது. தூக்கமின்மை இந்த நோயை மோசமாக்கும். தூக்கமின்மை உடலில் உள்ள அழுத்த ஹார்மோன்களின் வெளியீட்டிற்கு வழிவகுக்கிறது. இது யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்க காரணமாகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | திடீரென்று அதிகமாக உடல் எடை குறைகிறதா? இந்த நோய்கள் காரணமாக இருக்கலாம், ஜாக்கிரதை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News