Side Effects of Betel Nut: பாக்கு மெல்வதால் ஏற்படும் தீமைகள்
பாக்கு சாபிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்று இங்கே பார்போம்.
பாக்கு என்பது பாக்கு மரத்திலிருந்து பெறப்படும் கொட்டையாகும். இது ஆசிய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் விளைகின்றது. இது தமிழர்களின் சடங்குகளிலும் விழாக்களிலும் அதிகமாக வெற்றிலையுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும். பாக்கினை உண்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயங்கள் உள்ளதாக ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது இவற்றில் வாய்ப்புற்றுநோய், களப்புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகும். எனவே பாக்கு சாபிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்று இங்கே பார்போம்.
பாக்கு சாபிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
* பாக்குகளை (Betel Nut) மெல்லுவது, சுபாரியில் புகையிலை அல்லது மெக்னீசய உள்ளடக்கம் இல்லாவிட்டல்லும், உணவுக்குழாய் புற்று நோயுடன் (Cancer) தொடர்பு படுத்தப் படுகிறது. இது ஆல்கலாய்டுகள் மற்றும் புற்றுநோய் ஏற்படுத்தும் பாலிஃபினாலைக் கொண்டிருக்கின்றன.
ALSO READ | இயற்கை குளிர்பானம் இளநீரின் பயன்கள் -ஒரு பார்வை!
* பாக்கு அடிக்கடி மெல்லுவது குறிப்பிடத்தக்க குரோமோசோம் ரீதியான இயல்பு மாற்ற அதிகரிப்புக்கு வழிகாட்டி, இதையொட்டி வாய் புற்றுநோய் உருவாகும் ஆபத்து அதிகரிக்கும். சுபாரியை மெல்வது ஈறுகளில் அழுகல் ஏற்படுத்தி வாய் புண்களை அதிகரிக்கலாம். பாக்கை மெல்வது கூட ஈறுகளை பின்செல்ல வைக்க காரணமாக இருக்கலாம்.
* பாக்கு மென்ற பிறகு கிடைக்கும் கூட்ட ஆற்றல் மற்றும் நன்னிலை, திரும்பத் திரும்ப அதை சாப்பிடும் மற்றும் சார்ந்திருக்கும் விளைவில் முடியும்.
* பாக்கு மெல்லுவதால் ஏற்படும் மற்ற பக்க விளைவுகளில் மாறுபட்ட பேச்சு, அதிகமான வெப்ப உணர்திறன், குளிர் மற்றும் மசாலாக்கள், உயர் ரத்த அழுத்தம், மனநிலை மாற்றங்கள், எரிச்சல், பதட்டம், கவனம் செலுத்துவதில் இழப்பு மேலும் நிம்மதியற்ற தூக்கம் ஆகியவை அடங்கும்.
பாக்கு சாபிடுவதால் ஏற்படும் நன்மைகள்
* கொட்டைப்பாக்குடன் வால் மிளகையும் வெற்றிலை சுண்ணாம்பையும் சேர்த்து வாயிலிட்டு மென்று சாப்பிட பற்கள் கரையாமல் அசைவு நீங்கி உறுதிப்படும்.
* கொட்டைபாக்குத்தூளில் ஒரு கிராம் அளவு கோதுமை மாவுடன் கலந்து 4 மணிநேரத்திற்கு ஒரு முறை கொடுத்துவர பேதி நிற்கும்.
* கொட்டைப்பாக்கினால் கோழை, மலக்கிருமி இவைகள் நீங்கும்.
* கொட்டைப்பாக்கை சுட்டு கரியாக்கி பல் துலக்க உபயோகப்படுத்த பற்கள் உறுதிப்படும். குடலில் உள்ள கிருமிகளை நீக்கி சுத்தப்படுத்துகிறது.
ALSO READ | இளநீர் மற்றும் கருப்பட்டி குளிர்பானம் தயாரிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR