Diseases Caused By Insomnia: இரவில் சரியாக தூங்காமல் அல்லது தாமதமாக தூங்கும் போதும், ​​போதுமான தூக்கம் வராமல் இரவில் அடிக்கடி எழுந்திருக்கும் நிலை ஏற்படும் போதும், ​​மிகவும் சோம்பலாக இருப்பதை நாம் அடிக்கடி உணர்ந்திருப்போம். கூடுதலாக, தலைவலி மற்றும் சோர்வும் அதிக அளவில் இருக்கும். இவை தூக்கமின்மையினால் ஏற்படும் சிறிய பிரச்சனைகள். ஆனால் தொடர்ந்து போதுமான தூக்கம் இல்லாமல், தூக்கமின்மை பிரச்சனை நீடித்தால், அது கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடும் நோய்களுக்கு வழிவகுக்கும் தூக்கமின்மை


இரவில் 7-8 மணி நேரம் நன்றாக தூங்குவது மிகவும் அவசியம். இல்லை என்றால், உடல் பல நோய்களின் இருப்பிடமாகி விடும். எனவே, உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும், ஆழ்ந்த தூக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பலருக்கு இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். தூக்கமின்மையால் சரியாக தூங்க முடியாமல், அமைதியின்மையை உணரலாம். இந்நிலையில், தூக்கமின்மையால் என்னென்ன நோய்கள் நம்மை தாக்கக் கூடும், தூக்கமின்மை பிரச்சனையிலிருந்து விடுபடுவது எப்படி என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.


தூக்கமின்மையால் ஏற்படும் நோய்கள்


தூக்கமின்மை பல நாள்பட்ட உடல் நல பாதிப்புக்கு (Health Tips) வழிவகுக்கும். இதனால் நமது மனநலனும் மிகவும் பாதிக்கப்படுகிறது. இது தவிர, போதுமான தூக்கம் இல்லாதவர்கள் உடல் பருமன், நீரிழிவு, கொழுப்பு, இரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினைகள், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மேலே கூறப்பட்டுள்ள நோய்களுக்கான முக்கிய காரணியாக தூக்கமின்மை உள்ளதை ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.


மேலும் படிக்க | சம்மரில் சுர்ருனு கோபம் வருதா... இந்த 6 விஷயங்களை செய்யுங்க் கூல் ஆகிவிடுங்க


இரவில் ஆழ்ந்த தூக்கம் வர செய்ய வேண்டியவை


1. நல்ல தூக்கத்திற்கு நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், தினமும் ஒரே நேரத்தில் சீக்கிரம் தூங்குவதை வழக்கமாக்குவது.


2. தூங்குவதற்கு 3-4 மணி நேரத்திற்கு முன் இரவு உணவு சாப்பிடுங்கள்.


3. உறங்குவதற்கு முன் மது, டீ-காபி மற்றும் பிற காஃபின் போன்ற சில பொருட்களை உட்கொள்ள வேண்டாம்.


4. தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், இது இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.


5. தூங்கும் அறையில், மனதிற்கு இதமான சூழலை உருவாக்கவும். தூங்கும் சமயத்தில் விளக்குகளை அணைக்கவும் அல்லது வெளிச்சத்தை மிகவும் மங்கலாக வைக்கவும்.


6. அறையின் வெப்பநிலையை மிக அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருக்கக் கூடாது. சீரான வெப்ப நிலை இருக்க வேண்டும்.


7. இரவில் தாமதமாக மொபைல், டிவி அல்லது லேப்டாப் ஆகியவற்றை பயன்படுத்துவதிலிருந்து விலகி இருங்கள்.


8. நல்ல மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.


இங்கே குறிப்பிட்டுள்ள விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம், தூக்கமின்மை தொடர்பான பிரச்சனைகளில் இருந்து எளிதாக விடுபடலாம். அவர்களின் உதவியுடன் நீங்கள் இரவில் நன்றாக தூங்கலாம்.


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | ‘இதை’ செய்யுங்கள்-வெயில் காலத்தில் வியர்வை நாற்றத்திற்கு பை-பை சொல்லுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ