புதுடெல்லி: கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை என்பது நக்கலாக சொல்லும் வார்த்தையாக இருந்தாலும், அது மிகவும் ஆழமானது. கொசுக்கள் கடிப்பது என்பது அந்த நேரத்து பிரச்சனையாகத் தோன்றினாலும் உண்மையில் மிகப் பெரிய அளவிலான நோய்களை ஏற்படுத்துகின்றன கொசுக்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெங்கு, மலேரியா, ஜிகா மற்றும் சிக்குன்குனியா, யானைக்கால் என பல நோய்களை கொசுகள் பரப்புகின்றன. கொசுவினால் பரவும் யானைக்கால் நோயின் முன்னெச்சரிக்கை அறிகுறிகள் என்ன தெரியுமா?


லிம்பேடிக் ஃபைலேரியாசிஸ் (lymphatic filariasis) என்றும் அழைக்கப்படும் யானைக்கால் நோய், பெண் கொசுக்களால் பரப்பக்கூடிய ஒட்டுண்ணிப் புழுக்களால் ஏற்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், யானைக்கால் நோயின் அறிகுறிகள் ஒரு குறிப்பிட்ட நிலை வரை தோன்றாது, எனவே, இந்த நோயை கண்டறிவது கடினம்.


இருப்பினும், யானைக்கால் நோயின் சில எச்சரிக்கை அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்தால் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறார் மும்பையில் சேவையாற்றி வரும் மூத்த மருத்துவர் டாக்டர் கிருஷ்ணகாந்த் டெப்ரி. 


மேலும் படிக்க | நிம்மதியா தூங்கணுமா: இரவில் இந்த டீ குடிச்சா போதும்
 
கால்களில் வீக்கம்
கைகள் மற்றும் கால்கள் காரணமே இல்லாமல் வீங்குவது யானைக்கால் நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று. உடலில் திரவம் சேர்வதன் காரணமாக கால்கள் மற்றும் கைகளில் வீக்கம் ஏற்படலாம்.


ஒரு கை அல்லது கால் அதன் வழக்கமான அளவைவிட பல மடங்கு வீங்கி, யானையின் பாதத்தை போல காணப்படும், எனவே, இந்த நோயை யானைக்கால் என்று அழைக்கின்றனர்.


விதைப்பை விரிவடைதல்


நோயின் பிற்பகுதியில் காணப்படும் விதைப்பையின் வளர்ச்சி யானைக்கால் நோயின் அறிகுறியாகும். ஆண்குறியின் கீழ் உள்ள தோல் பின்வாங்கப்படலாம், இது வலி மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்துகிறது. ஃபைலேரியா நிணநீர் மண்டலத்தை சேதப்படுத்துவதால், உடலின் பல்வேறு பாகங்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.



 
மார்பகங்களின் வீக்கம்


ஆண்களைப் போலவே, யானைக்கால் நோய் பெண்களின் பிறப்புறுப்புகளை பாதிக்கிறது. இது தொடைகளுக்கு இடையில் தோலில் புண் ஏற்படுவது, மார்பகத்தை பெரிதாக்குகிறது.


நிணநீர் கணுக்கள் மற்றும் மார்பகங்களில் இரத்த ஓட்டம் தடைபடுவதால் நிணநீர்க்குழாய்கள் மற்றும் நிணநீர் கணுக்கள் வளர்ச்சியடைகிறது.



சருமம் உலர்ந்து போவது
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவரின் தோல் வறண்டு தடிமனாக இருக்கும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு சரியான இரத்த ஓட்டம் இல்லாததால், புண், குழி மற்றும் நிறம் மாறுவது என ஹைபர்கெராடோசிஸ் (hyperkeratosis) போன்ற நிலைக்கு இட்டுச் செல்லும்..


உடல்நலக்குறைவு
பொதுமைப்படுத்தப்பட்ட நோய் உணர்வுடன் அசௌகரிய உணர்வு யானைக்கால் நோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். கடுமையான காய்ச்சல் மற்றும் குளிர் போன்ற பிற அறிகுறிகள் நோய் தோன்றும். இது தொற்று மற்றும் வீக்கத்தால் ஏற்படும் உடலில் ஏற்படும் வெப்பத்தால் ஏற்படும்.


மேலும் படிக்க |  கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்... கை விரித்த சீனா...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe