இரவில் தயிர் சாப்பிடாதீர்கள்... உடல்நிலையில் இத்தனை பிரச்னைகள் வரலாம்!
Disadvantages Of Curd: இரவு நேர உணவில் தயிரை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலில் சில பிரச்னைகள் ஏற்படலாம். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Disadvantages Of Curd In Dinner: கெட்டியான தயிர் என்பது நமது மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒன்று. நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் தயிர் என்பது வெவ்வேறு விதங்களில் மக்களால் உணவுகளில் சேர்க்கப்படுகிறது. தயிரில் உடலுக்கு நன்மைகள் நுண்ணுயிர்கள், கால்சியம் மற்றும் பல ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. இதனால் தயிர் உடலுக்கு பல விதங்களில் நன்மையை அளிக்கின்றன.
ஆனால், அதே தயிர் உங்களுக்கு பிரச்னையாகக் கூட மாறி உடல்நிலையை மோசமாக்கவும் வாய்ப்புள்ளது என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம், தயிரை நீங்கள் தவறான பொழுதில் உட்கொண்டால் அவை உங்களின் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்கின்றனர் மருத்துவர் வல்லுநர்கள். அதாவது, இரவுப் பொழுதில் தயிரை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும். அந்த வகையில் இரவில் தயிர் சாப்பிட்டால் ஏற்படும் சில உடல்நல பாதிப்புகள் குறித்து இங்கு காணலாம். இதன்மூலம், தயிரை இரவில் சாப்பிடக்கூடாது என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்வீர்கள்.
தூக்கம் கெடும்
இரவில் தயிர் சாப்பிடுவதால் முக்கியமாக உங்களின் தூக்கம் கெடலாம். தயிரில் உள்ள Tyramine, உங்களின் மூளையை தூண்டிக்கொண்ட இருக்கும். இதனால் உங்களால் சீக்கிரம் தூங்க இயலாது. தூக்கம் சரியாக இல்லை அனைத்தும் பாழாகும். தூக்கமின்மையும், குறைவான தூக்கமும் பல உடல்நல பாதிப்புகளுக்கு இட்டுச் செல்லும்.
மேலும் படிக்க | 30 வயதுக்கு மேல் இருக்கும் பெண்கள் தவிர்க்ககூடாத 5 உணவுகள்..! சொன்னா கேளுங்க
கொழுப்பு தங்கிவிடும்
தயிர் உடலுக்கு புரதம் அளிக்கக்கூடிய சிறப்பான உணவுதான். இருப்பினும் அதில் கொழுப்பும் உள்ளது. இரவில் உங்களின் உடல் செயல்பாடு என்பது பெரிதும் இருக்காது. உடல் உழைப்பு இல்லாத சமயத்தில் அதனை சாப்பிடுவதன் மூலம் உடலில் அந்த கொழுப்புகள் தங்கிவிடும் எனலாம். அந்த வகையில், உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் தயிரை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
செரிமானத்தில் பிரச்னை வரலாம்
பல பேருக்கு இரவில் தயிரை உட்கொண்டால் செரிமான பிரச்னை வரும். வயிறு உப்புசமாகும், வயிற்றில் வாயு உண்டாகலாம். இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் தயிரில் இருக்கும் Lactose எனப்படும் சர்க்கரை கலவை சிலரின் உடலால் ஏற்றுக்கொள்ளப்படாது. இதனை Lactose Intolerance என்பார்கள். குறிப்பாக வயதாக வயதாக நமது உடல் அந்த Lactase நொதியை உருவாக்குவதை குறைத்துவிடும், இதுவும் Lactose Intolerance பிரச்னைக்கு கொண்டுச் செல்லும்.
மூட்டு வலி
நீங்கள் கீல்வாதம் அல்லது மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர் என்றால் இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இரவில் தயிர் சாப்பிடுவதால் மூட்டு பகுதிகளில் விறைப்பு அதிகமாகி, வலியும் அதிகமாகும் எனப்படுகிறது. எனவே தயிரை இரவு உணவில் சேர்ப்பதை தவிர்க்கவும்.
எப்போது சாப்பிடலாம்?
தயிரை காலையில் சாப்பிடுவதே நல்லது. பகற்பொழுதுகளில் உடல் உழைப்பு அதிகம் இருக்கும் நேரத்தில் தயிரை உட்கொள்ளுங்கள், அதுவே தயிர் சாப்பிட சரியான நேரமாகவும் இருக்கும். இரவில் உங்களுக்கு தயிர் சேர்க்க வேண்டும் என்பது போல் இருந்தால் தயிரை நீர் கலந்து நல்ல மோராக ஆக்க அதனை உங்களின் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கெட்டி தயிராக சாப்பிடுவதே இரவில் மேற்கூறிய பிரச்னைகளை ஏற்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: தயிரை இரவில் சாப்பிடுவது உடலுக்கு நன்மையில்லை என்ற இந்த செய்தியானது பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியம் உள்ளிட்டவையின் அடிப்படையில் இங்கு தொகுத்து எழுதப்பட்டுள்ளது. இதனை பின்பற்றுவதற்கு முன் உங்களின் மருத்துவர நீங்கள் ஆலோசிக்க வேண்டும். இந்த தகவல்களை Zee News உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | ஆண்கள் புறக்கணிக்கக்கூடாத 3 முக்கிய அறிகுறிகள்..! புரோஸ்டேட் புற்றுநோய் இருக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ