ஆரோக்கியமானவை என்று சொல்லப்படும் உணவு பொருட்களாக இருந்தாலும் அது சிலருக்கு எதிர்மறையான விளைவுகளை கொடுக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலர் பழங்களில் மிகவும் சத்து மிக்கது என்பது பிஸ்தா என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அது சிலருக்கு பாதிப்பையும் ஏற்படுத்தலாம். அதுமட்டுமல்ல, பிஸ்தாவை அதிக அளவில் உட்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். 


எந்தெந்த பிரச்சனைக உள்ளவர்கள் பிஸ்தா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


பிஸ்தாவை அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பிஸ்தா பல நோய்களைக் குணப்படுத்துவதில் நன்மை பயக்கும், ஆனால் அதை குறைந்த அளவில் உட்கொள்ளுங்கள். 


பிஸ்தாவை சிறுநீரக பாதிப்பு, சுவாச பிரச்சனைகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும். பிஸ்தாக்களில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது, ஆனால் புரதத்தை அதிகமாக உட்கொள்ளக்கூடாது, அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.


ALSO READ | வில்வப் பழத்தில் இத்தனை நன்மைகளா? 


பொதுவாக, ஒருவர் தினமும் 30 பிஸ்தாக்களை சாப்பிடலாம், ஆனால் வேறு விதங்களில் புரதத்தை எடுத்துக் கொண்டால், 30 பிஸ்தா என்பது மிகவும் அதிகமானதாகிவிடும்.  


இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பிஸ்தாவை அதிகமாக உட்கொண்டால், அது வயிற்றுப்போக்கு, இதய நோய், சுவாச பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை (Side Effects of Pista) ஏற்படுத்தும்.


சர்க்கரை நோய்
நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் குறைந்த அளவில் பிஸ்தாவை சாப்பிடலாம். அதிக அளவு பிஸ்தா சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்துவிடும். நீரிழிவுக்கான மருந்துடன் சேர்த்து பிஸ்தாவை அதிகமாக உட்கொள்வது ரத்தச் சர்க்கரையை (Blood Sugar) குறைத்துவிடும்.


வயிற்றுப்போக்கு
பிஸ்தாவை அதிகமாக உட்கொள்வது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். உடலில் புரதச்சத்து அதிகமாக இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு பிரச்னைகள் அதிகரிக்கும்.


ALSO READ | அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதம் தரும் ஸ்ட்ராபெர்ரி


ஒவ்வாமை
சிலருக்கு அதிக புரதம் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், பிஸ்தாவை அதிகமாக உட்கொண்டால், அது தோல் வெடிப்பு மற்றும் சருமத்தில் அரிப்புகளை ஏற்படுத்தும்.


சுவாசக் கோளாறு
ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் பிஸ்தாவை உட்கொள்ளலாம், ஆனால் பிஸ்தாவை அதிகமாக உட்கொள்ள வேண்டாம். பிஸ்தாவில் நிறைய புரதம் உள்ளது, எனவே, சுவாசிப்பதில் சிரமத்தை அதிகரிக்கும்.


சிறுநீரக பாதிப்பு
ரத்தத்தில் அதிக அளவு புரதம் இருப்பதால் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் ரத்தத்தில் ஏற்கனவே புரதத்தின் அளவு அதிகமாக இருந்தால், அதோடு பிஸ்தாவையும் சாப்பிட்டால், சிறுநீரகம் பாதிக்கப்படலாம். எனவே பிஸ்தாவை அதிகமாக சாப்பிட வேண்டாம். சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே பிஸ்தாவை உட்கொள்ள வேண்டும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ நியூஸ் இதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | விலையுயர்ந்த க்ரீம்களுக்கு டஃப் கொடுக்கும் ஆரஞ்சு பழச்சாறு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR