Weight Loss Tips: உடல் எடையை குறைக்க வேண்டுமா என்ற கேள்வி கேட்கப்பட்டால், பெரும்பாலானவர்களின் பதில் 'ஆம்' என்றுதான் இருக்கும். இன்றைய அவசர உலகில் உடல் பருமன் என்பது பலருக்கு உள்ள பிரச்சனையாக உள்ளது. தொப்பை கொழுப்பும் உடல் எடையும் வேகமாக அதிகரித்து விடுகின்றன. ஆனால், அவற்றை குறைப்பது மிகப்பெரிய பணியாக இருக்கின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், உடல் எடையை குறைக்க எதை செய்ய வேண்டும் என்பதில் நாம் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறோமோ அதே அளவு ஆர்வத்தை எதை செய்யக்கூடாது என்பதிலும் காட்ட வேண்டும். ஆரோக்கியமற்ற உணவு முறையும் வாழ்க்கை முறையும் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணங்கள் ஆகின்றன. அவ்வப்போது உடல் எடையை அதிகரிக்கும் துரித உணவுகள் போன்ற உணவுகளை உட்கொள்வதால், நாம் எடை இழப்புக்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகின்றன.


தொப்பை கொழுப்பும் (Belly Fat) உடல் எடையும் அதிகரிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்? இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் சில உதவிக்குறிப்புகளை அளித்துள்ளார். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய 5 ஆரோக்கியமற்ற உணவுகளை பற்றி இங்கே காணலாம்.


துரித உணவுகள்


பர்கர்கள், பீட்சா, பிரெஞ்ச் ஃப்ரைஸ், பொரித்த உணவுகள் போன்ற துரித உணவுகள் (Fast Foo) உடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இவற்றில் அதிக கலோரிகள் இருப்பதோடு, டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சோடியமும் உள்ளன. இவை அனைத்தும் உடல் ஆரோக்க்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இந்த உணவுகள் உங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், இதய நோய், நீரிழிவு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். ஆகையால் உடல் எடையை குறைக்க (Weight Loss) நினைப்பவர்கள் இப்படிப்பட்ட துரித உணவுகளை கண்டிப்பாக உட்கொள்ளக்கூடாது. 


மேலும் படிக்க | இந்தியாவுக்கு மிக அருகில் குரங்கு அம்மை: அறிகுறிகள், பரவும் முறைகள், தடுக்கும் வழிகள் இதோ


சோடா மற்றும் குளிர்பானங்கள்


சோடா மற்றும் குளிர்பானங்களில் (Soft Drinks) கலோரி அளவு அதிகமாக உள்ளது. மேலும், இவற்றில் எந்த விதமான ஊட்டச்சத்துகளும் இருப்பதில்லை. இந்த பானங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கின்றன. இதனால் இன்சுலின் அளவு அதிகரித்து எடை இழப்பு செயல்முறை மந்தமாகிறது. சோடா மற்றும் பிற சர்க்கரை பானங்களை குடிக்காமல் இருந்தால், எடை இழப்பை துரிதப்படுத்தலாம். இவற்றுக்கு பதிலாக தண்ணீர், இளநீர், கிரீன் டீ மற்றும் மூலிகை தேநீர் போன்ற ஆரோக்கியமான பானங்களை பருகலாம். 


பதப்படுத்தப்பட்ட உணவுகள்


சிப்ஸ், குக்கீஸ், மிட்டாய்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களில் (Processed Food) அதிக சர்க்கரை, உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உள்ளன. இந்த தின்பண்டங்கள் விரைவாக கலோரிகளை சேர்த்து, எடை இழப்பு முயற்சிகளை பாதிக்கின்றன. ஆகையால் இவற்றை தவிர்த்து அவற்றுக்கு பதிலாக பழங்கள், கொட்டைகள், உலர் பழங்கள், காய்கறி சாலட், வீட்டில் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டிகள் ஆகியவற்றை உட்கொள்வது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.


சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்


வெள்ளை ரொட்டி, பாஸ்தா மற்றும் வெள்ளை அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் (Refined Carbohydrates) எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளன. இவை உடலில் விரைவாகச் செரிக்கப்பட்டு, இரத்தச் சர்க்கரையையும் அதிகரிக்கச் செய்கின்றன. இதன் காரணமாக மீண்டும் மீண்டும், மிக விரைவாக பசிக்கிறது. ஆகையால், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக, முழு தானியங்கள், பழுப்பு அரிசி மற்றும் பல தானிய ரொட்டிகளை உணவில் சேர்க்கலாம். இவை வயிற்றிக்கு நிரம்பிய உணர்வை அளித்து உடல் எடையை அதிகரிக்கவும் உதவுகின்றன. 


பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள்


பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள் (Packed Juice) பெரும்பாலும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ஆனால், அவற்றில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருக்கும். இதன் காரணமாக இவை கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கின்றன. இது எடையை அதிகரிக்கின்றது. இவற்றுக்கு பதிலாக, நீங்களே வீட்டில் ஃப்ரெஷ்ஷாக பழச்சாறுகளை செய்து குடிக்கலாம். இவை எடை இழப்புக்கு நன்மை பயக்கும்.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சிறுநீரின் நிறம் சொல்லும் நோய்களின் சீக்ரெட்.... இனிமே கவனமா பாருங்க!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ