பழங்கள் பொதுவாக உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடியவை. இதனால் பலரும் பழங்களை சாப்பிடுவது அதிகமாக இருக்கிறது. சாதாரண பழங்கள் போல உலர வைக்கப்பட்ட பழங்களும் மக்கள் மத்தியில் பிரபலம். அதுமட்டுமின்றி உடலுக்கு ஆரோக்கியத்தையும் அவை அதிகளவில் கொடுக்கின்றன. ஆரோக்கியம் அதிகளவு கொடுப்பதால் அதை அளவுக்கதிகமாக சிலர் சாப்பிடுகின்றனர். அது உடல்நிலைக்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடியது அல்ல. உலர் பழங்களை அளவுடன் சாப்பிடுவதே ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். அப்படி உலர்ந்த பழங்களை அதிகம் சாப்பிடுவதால் வரக்கூடிய உடல்நல பிரச்னைகள் பின்வருமாறு:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடல் பிரச்னை:


உலர்ந்த பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது.குடலின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் நார்ச்சத்தின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் நார்ச்சத்து அதிகமானால் குடலுக்கு பாதிப்பு உண்டாகும்.


மேலும் படிக்க | உங்கள் எலும்புகளில் வலுவில்லையா? காரணம் இதுதான், இப்படி சரி செய்யுங்கள்


குறிப்பாக உலர்ந்த பழங்களை அதிகமாக உட்கொள்வது வாயு, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.


அதிகரிக்கும் எடை: 


தினமும் 250 கலோரி அளவு உலர் பழங்கள் உட்கொள்வது ஒரு மாதத்தில் ஒரு கிலோ உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுத்துவிடும். மூன்று பேரீச்சம் பழம், இரண்டு டேபிள்ஸ்பூன் புளூபெர்ரி, இரண்டு அத்திப்பழங்கள் சாப்பிடுவது சுமார் 60 கலோரிகளை உடலுக்கு வழங்கும். அதனால் சாப்பிடும் உலர் பழங்களின் கலோரி அளவை கருத்தில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் பழங்களை சாப்பிட வேண்டும்.



சிதையும் பல்: 


பிரக்டோஸ் வடிவத்தில் இயற்கையான சர்க்கரை உலர்ந்த பழங்களில் இருக்கிறது. உலர்ந்த பழங்களை அதிகம் சாப்பிடும்போது சர்க்கரையும் அதிகரித்து பற்சிதைவை ஏற்படுத்திவிடும். சில உலர் பழங்கள் பல் இடுக்குகளுக்குள் ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவை.


மேலும் படிக்க | Weight Loss Food: இந்த பொருட்கள் உடல் எடையை வேகமாக குறைக்கும்


அவற்றை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் பல் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொள்ளக்கூடும்.  உலர்ந்த பழங்களை சாப்பிட்டதும் தண்ணீர் பருகினால் பல் சிதைவிலிருந்து தப்பலாம். அப்படி செய்வதன் மூலம் பற்கலில் படிந்திருக்கும் சர்க்கரையும் வெளியேறும்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ