கடந்த சில ஆண்டுகளாக, கொரோனா வைரஸ் தொற்று, லாக்டவுன் மற்றும் வீட்டு கலாச்சாரம் போன்றவற்றால், பலர் உடல் பருமனுக்கு ஆளாகியுள்ளனர். தற்போது இந்த தொப்பையை குறைக்க மக்கள் பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று ஸ்ட்ரிக்ட் டயட் சார்ட்டை கடைபிடிப்பது மட்டும் பலன் கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிகரித்து வரும் எடையை எப்படி குறைப்பது பெரிய சவாலாகிவிட்டது. எனவே இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் 'நிகில் வாட்ஸ்' ஜீ நியூஸ் இடம், சமையலறையில் வைக்கப்படும் நறுமணப் பொருளின் உதவியுடன் தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பைக் குறைக்க முடியும் என்று கூறியுள்ளார். எப்படி என்று தெரிந்துக்கொள்வோம்.
சிறிய ஏலக்காய் வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும்
உடல் பருமன் என்பது ஒரு நோயல்ல, ஆனால் அதன் காரணமாக பல நோய்கள் ஏற்பட ஆரம்பிக்கிறது, பிஸியான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் இதற்குப் பெரிதும் காரணம் ஆகும். இந்த பிரச்சனைகளை போக்க, நீங்கள் சிறிய ஏலக்காயை எடுத்துக் கொள்ளலாம், இந்த ஏலக்காய் நம் உடலில் ஏற்படும் சளி, இருமல் மற்றும் வாய் துர்நாற்றத்தை அகற்றவும் உதவுகிறது, ஆனால் நீங்கள் இந்த ஏலக்காயின் உதவியால் உங்களின் உடல் எடையை குறைக்க முடியும் என்பது தெரியுமா?
மேலும் படிக்க | சர்விகல் கழுத்து வலியால் அவதியா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் அளிக்கும்
சிறிய ஏலக்காயின் பயன் எதில் அதிகம்
சிறிய ஏலக்காயில் உடலில் ஏற்படும் கொழுப்பை குறைக்கும் குணம் உள்ளது, இதனை தினசரி உணவில் சேர்த்து வந்தால், வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை இயற்கையாகவே கரைக்கலாம். இந்த நறுமண கரம் மசாலா பொதுவாக கறிகள், பராத்தா மற்றும் இனிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. சிலர் ஏலக்காயை பால் மற்றும் டீயில் கலந்து குடிப்பார்கள் அல்லது மசாலா டீயில் கூட கலந்து குடிப்பார்கள்.
உடல் எடை குறைக்க உதவும்
சிறிய ஏலக்காயில் கொழுப்பை எரிக்கும் குணம் உள்ளது, இதனை தினசரி உணவில் சேர்த்து வந்தால், வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை இயற்கையாகவே கரைக்கலாம். இந்த நறுமண கரம் மசாலா பொதுவாக கறிகள், பராத்தா மற்றும் இனிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. சிலர் ஏலக்காயை பால் மற்றும் சர்க்கரை டீயில் கலந்து குடிப்பார்கள் அல்லது மசாலா டீயில் கூட குடிப்பார்கள்.
கொலஸ்ட்ரால் குறையும்
ஏலக்காய் சாப்பிடுவது செரிமான சக்தியை அதிகரிக்கிறது, இதன் காரணமாக வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை, மலச்சிக்கல், வயிற்றில் எரியும் வாயு மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளும் நீங்கும். செரிமான சக்தி அதிகரிப்பதால், கொழுப்பை எரிப்பது எளிதாகி, படிப்படியாக எடை குறையத் தொடங்குகிறது. தினமும் ஒன்று அல்லது இரண்டு சிறிய ஏலக்காயை பச்சையாக சாப்பிட்டு வந்தால், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பையை குறைக்கணுமா? இப்படி செஞ்சி பாருங்க, சட்டுனு குறையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ