உடலுக்கு ஆரோக்கியம் தரும் என நாம் உண்ணும் பாதாம் கொட்டையால் ஏற்படும் தீமைகள் என்ன தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க நாம் அனைவரும் கடுமையாக உழைக்கிறோம், ஒவ்வொரு நாளும் நம் அனைவருக்கும் நல்லது என்று ஒன்றை உட்கொள்கிறோம். அந்த வகையில் தான் சத்தான உணவாக கருதப்படும் பாதாம் கொட்டைகளை அதிக அளவில் உண்கிறோம்.


உண்மையில், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஈ, ஃபைபர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பாதாம் கொட்டைகளில் காணப்படுகின்றன, இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், ஒரு நாளில் 3-4 பாதாம் பருப்பு சாப்பிட்டால் அது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம், இதை அதிகமாக சாப்பிட்டால் அது உடல்நல பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. ஆம் குறிப்பிட்ட சில சுகாதார நிலையில் பாதாம் கொட்டைகளை நாம் உண்ண கூடாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் எந்த சுகாதார நிலையை பாதாம் கொட்டைகளை நாம் உட்கொள்ளக்கூடாது என்பதை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.


ALSO READ | தினந்தோறும் சானிடைசர் உபயோகிப்பதால் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள்...


1. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாதாம் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது.
 
2. சிறுநீரக கற்கள் அல்லது பித்தப்பை நோய் பாதிப்பு உள்ளவர்களும் பாதாம் பருப்பை உட்கொள்ளக்கூடாது என்று கூறப்படுகிறது, ஏனெனில் இது நன்மை பயக்காது.


3. பாதாம் பருப்பில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு நல்லது. அதே நேரத்தில், பாதாம் அளவுக்கு அதிகமாக உட்கொண்ட பிறகு செரிமான பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன.


4. பாதாமில் அதிக அளவு வைட்டமின் E காணப்படுகிறது, இதன் காரணமாக அதிகப்படியான அளவு தலைவலி, சோர்வு உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது.


5. ஏதேனும் உடல்நலப் பிரச்சினை காரணமாக நீங்கள் ஆண்டிபயாடிக் மருந்தை உட்கொண்டால், பாதாம் சாப்பிட வேண்டாம் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.


ALSO READ | மன அழுத்தத்தை குறைக்க உதவும் ‘பானானா டீ...’; தயாரிப்பது எப்படி?