நீங்கள் அனைவரும் இதுநாள் வரை கிரீன் டீ அல்லது ப்ளைன் டீ அருந்தியிருப்பீர்கள். ஆனால் இன்று பனானா டீ என்று ஒன்று இருப்பது உங்களுக்கு தெரியுமா?
வாழைபழத்தால் உருவாக்கப்படும் இந்த டீ அதன் ஆங்கில பெயரால் பனானா டீ என அழைக்கப்படுகிறது. எடை இழப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், உடல் பருமன் மற்றும் இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கும் இந்த டீ-க்கு தற்போது அதிக டிமேண்ட் தென்படுகிறது. இந்த தேநீர், கிரீன் டீ போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த டீ-யினை எவ்வாறு தயாரிப்பது, அதன் நன்மைகள் என்ன என்பதை இன்று இந்த பதிவில் நாம் பாரக்க இருக்கிறோம்.
பொதுவாக பானானா டீ-யினை இரண்டு வழிகளில் தயாரிக்கலாம்
முதல் வழி - ஒரு பாத்திரத்தில் 2-3 கப் தண்ணீரை ஊற்றி சூடேற்றவும். பின்னர் இதில் ஒரு பழுத்த வாழைப்பழத்தை தோலுரித்து 5-10 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் வேகவைக்கவும். இப்போது இதில் இலவங்கப்பட்டை அல்லது தேன் சேர்த்து குடிக்கவும்.
இரண்டாவது வழி - ஒரு பாத்திரத்தில் 2-3 கப் தண்ணீரை ஊற்றி சூடேற்றவும். இந்த கொதிக்கு தண்ணீரில் வாழைப்பழங்களை கழுவி, குறைந்த தீயில் 10-15 நிமிடங்கள் வேகவைக்கவும், பின்னர் அதை வடிகட்டி அதில் இலவங்கப்பட்டை அல்லது தேன் சேர்த்து பருகவும்.
நன்மைகள்
- பனானா டீ வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது, இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. மேலும் இதைக் குடித்த பிறகு, பசியும் குறைகிறது.
- இந்த தேநீர் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது இரத்த நாளங்கள் மற்றும் தமனிகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
- செரோடோனின், டோபமைன் மற்றும் டிரிப்டோபான் நிறைந்த இந்த தேநீர் சிறந்த தூக்கத்திற்கு நல்லது. தினமும் 1 கப் பானானா டீ அருந்தினால் உங்களுக்கு நல்ல தூக்கம் வரும்.
- ஒவ்வொரு நாளும் 1 கப் டீ உட்கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், இதனால் நீங்கள் சளி-இருமல், பாக்டீரியா தொற்று மற்றும் பிற நோய்களிலிருந்தும் விலகி இருக்க முடியும்.
- வாழைப்பழ தேநீர் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தாத மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.