Sweetness: இனிப்பு சுவையின் அடிப்படை அம்சங்கள் என்ன தெரியுமா?
அறுசுவைகளில் அனைவருக்கும் பிடித்த சுவை இனிப்பு. உடலின் இயக்கத்திற்கு அத்தியாவசியமானது என்றாலும், சர்க்கரை நோய், உடல்பருமன், பக்கவாதம், இதயநோய் என பல நோய்களுக்கும் மூல காரணமாகிறது.
அறுசுவைகளில் அனைவருக்கும் பிடித்த சுவை இனிப்பு. ஒரு நல்ல விஷயத்தை சொல்வதென்றால் இனிப்பான செய்தி என்று சொல்லும் அளவுக்கு இனிப்பு சுவைக்கும் மகிழ்ச்சிக்கும் ஒற்றுமை இருக்கிறது. அன்றாடம் நாம் ருசிக்கும் சுவைகளில் ஒன்று இனிப்புச்சுவை.
தொடர்ந்து தினமும் அதிக அளவில் சர்க்கரை எடுத்துக் கொண்டிருப்பதால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு உயர்கிறது. அது உடலின் இயக்கத்திற்கு அத்தியாவசியமானது என்றாலும், சர்க்கரை நோய், உடல்பருமன், பக்கவாதம், இதயநோய் என பல நோய்களுக்கும் மூல காரணமாகிறது.
இனிப்புகளில் அப்படியென்ன இருக்கிறது? இனிப்பான உணவு உடலுக்கு நஞ்சாவது எப்படி?
பொதுவாக நாம் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரை கரும்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது. கரும்பு, சர்க்கரையாக உருமாறுவதற்கு முன்னால் பல்வேறு கட்டங்களை கடக்கும்போது அதன் இனிப்பு சுவை விஷமாக மாறுகிறது. ஆனால் இதைப் பற்றி சரியாக தெரியாமல் நாம் சர்க்கரையை சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.
Also Read | முட்டையின் சூப்பர் சத்துக்கள் என்ன தெரியுமா?
கரும்பு பயிரில் இருந்து கிடைக்கும் சாற்றில் சுண்ணாம்பு சேர்க்கப்பட்டு கொதிக்க வைக்கப்படும். பழுப்பு நிறத்தில் கிடைக்கும் இந்த திரவம் காயவைக்கப்பட்டு, கார்பனேஷன் (Carbanation) என்ற முறையில் சுத்தப்படுத்தப்படும்.
கார்பனேஷன் முறையில் கால்சியம் (Calcium) ஹைராக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு கலக்கப்படும். பிறகு அதில், கால்சியம் ஹைட்ராக்ஸைட், பாஸ்பரிக் அமிலம் மற்றும் ஆக்டிவேடட் கார்பன் சேர்க்கப்பட்டால் தான் கரும்புச் சாறு வெண்மையான நிறத்திற்கு மாறுகிறது. அந்த சாறை காயவைத்து சர்க்கரை (Sugar) தயாரிக்கப்படுகிறது. இதில் 260 கலோரிகள் (Calories) கொடுக்கும் இனிப்பு சுவை ஏற்றப்படுகிறது.
இந்த ரசாயன நடைமுறைகளால் சத்துமிக்க கரும்புச் சாற்றில் இருக்கும் வைட்டமின்கள், கனிமங்கள், நுண் ஊட்டப்பொருட்கள் என அனைத்து ஊட்டச்சத்துக்களும் அழிந்து நஞ்சாகிவிடுகிறது. அதாவது நாம் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரையில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் ஏதுவே இல்லை என்பது கசப்பான உண்மை.
Also Read | Post-COVID-19 syndrome: மறதியை கொடுக்கும் COVID-இன் பக்க விளைவுகள்
சரி அப்படியிருந்தாலும் ஆரோக்கிய சீர்கேட்டை ஏற்படுத்தக்கூடிய சர்க்கரையை தவிர்த்துவிட்டு வாழ முடியுமா? உண்மையில் சர்க்கரை உடலுக்கு புத்துணர்சி கிடைத்த உணர்வு ஏற்படும்.
சர்க்கரை அல்லது அதால் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டவுடன், அது குளோக்கோசாக மாற்றி ரத்தத்தில் கலக்கிறது.
வெள்ளை சர்க்கரையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க வேண்டுமானால் வெல்லம், நாட்டு சர்க்கரை, கருப்பட்டி என வேறுவித இனிப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதைத் தவிர, இனிப்பான பழங்கள் (Fruits) அல்லது வேறு உணவுப் பொருட்களை சாப்பிடலாம். வெள்ளை சர்க்கரையில் இனிப்பைத் தவிர கலோரியைத் தவிர வேறொன்றும் இல்லை ஆனால் வேறு பொருட்களில் கலோரிகளைத் தவிர பல்வேறு சத்துக்கள் இருக்கும்.
மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய இனிப்புச் சுவை குழந்தைகளின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. எனவே, வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக, பழவகைகள், உருளைக் கிழங்கு, கேரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
Also Read | பரங்கிக்காய் தானே என எண்ண வேண்டாம்; ஏராளமான நன்மைகள் அதில் உள்ளது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR