Eggs on Brain Health: முட்டையின் சூப்பர் சத்துக்கள் என்ன தெரியுமா?

முட்டை, சைவமா இல்லை அசைவமா என்ற கேள்வி மெகா கேள்வியாக தொடர்கிறது. ஆனால், இறைச்சி உணவுகளை சாப்பிடாதவர்கள் கூட முட்டை சாப்பிட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 3, 2021, 03:25 PM IST
  • முட்டை, சைவமா இல்லை அசைவமா?
  • முட்டையில் வைட்டமின்கள் பி 6 மற்றும் பி 12 சத்துக்கள் உள்ளன
  • தினசரி முட்டை சாப்பிட்டால் மறதி ஏற்படாது
Eggs on Brain Health: முட்டையின் சூப்பர் சத்துக்கள் என்ன தெரியுமா? title=

முட்டை, சைவமா இல்லை அசைவமா என்ற கேள்வி மெகா கேள்வியாக தொடர்கிறது. ஆனால், இறைச்சி உணவுகளை சாப்பிடாதவர்கள் கூட முட்டை சாப்பிட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அதிலும், கோவிட் நோய் பரவியிருக்கும் இந்த காலத்தில் தினம் ஒரு முட்டை என்பது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டையில் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன என்பது தெரியும். ஆனால், மூளையின் இயல்பான செயல்பாட்டுக்கு தேவையான  வைட்டமின்கள் பி 6 மற்றும் பி 12, ஃபோலேட் மற்றும் கோலின் உள்ளிட்ட என பல ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாக முட்டை உள்ளது.

கோலின் ஒரு முக்கியமான சத்து ஆகும், இது உடலில் அசிடைல்கொலின் (acetylcholine) உருவாக்க உதவுகிறது, இது மனநிலை மற்றும் நினைவகத்தை சீராக்க உதவும் neurotransmitter ஆகும்.

Also Read | பரங்கிக்காய் தானே என எண்ண வேண்டாம்; ஏராளமான நன்மைகள் அதில் உள்ளது

கோலின் அதிக அளவு உட்கொள்வது சிறந்த நினைவாற்றல் மற்றும் மன செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக இரண்டு ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஆனால் பலருக்கு உணவில் போதுமான கோலின் கிடைப்பதில்லை.  

தினசரி உணவில் முட்டைகளை சேர்த்துக் கொள்வது கோலின் சத்தைப் பெற ஒரு சுலபமான வழியாகும், ஏனெனில் இந்த ஊட்டச்சத்தின் அதிக செறிவூட்டப்பட்ட ஆதாரங்களில் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ளன.

ஒரு நாளைக்கு பெண்களுக்கு 425 மி.கி மற்றும் ஆண்களுக்கு 550 மி.கி கோலின் தேவை. ஒரு முட்டையின் மஞ்சள் கரு 112 மி.கி உள்ளது. மேலும், முட்டைகளில் காணப்படும் பி வைட்டமின்கள் மூளையின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.  

Also Read | Post-COVID-19 syndrome: மறதியை கொடுக்கும் COVID-இன் பக்க விளைவுகள்

ஹோமோசிஸ்டீன் (homocysteine) என்ற அமினோ அமிலமான அளவு உடலில் குறைந்தால் வயதானவர்களுக்கு  அல்சைமர் நோய் ஏற்படுகிறது. முட்டை சாப்பிடுவதால், அதில் இருக்கும் ஹோமோசிஸ்டீன் aல்சைமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

மேலும், இரண்டு வகையான பி வைட்டமின்கள் - ஃபோலேட் மற்றும் பி 12 ஆகியவற்றில் குறைபாடு இருந்தால் மனச்சோர்வு ஏற்படும். முதுமை மற்றும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஃபோலேட் குறைபாடு ஏற்படுவது பொதுவானது, ஃபோலிக் அமிலம் முட்டையில் உள்ளது. தினசரி முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

முட்டையில் உள்ள வைட்டமின் பி 12, மூளை ரசாயனங்களை ஒருங்கிணைக்கிறது. மூளையில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதிலும் பங்காற்றிகிறது. முட்டை சாப்பிடுவதற்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து நேரடி ஆராய்ச்சி மிகவும் குறைவு என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும், முட்டைகளில் காணப்படும் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கல் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

Also Read | Chocolate Meditation: தியானம் செய்ய இப்படி ஒரு சுவாரசியமான முறை உள்ளதா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News