உணவு பழக்கம் ஆளுக்கு ஆள், ஊருக்கு ஊர் மாறுபடுவது. ஆனால், உலகம் முழுவதும் இறைச்சி சாப்பிடும் பழக்கம் பொதுவானதாக இருக்கிறது.அதிலும் கோழி இறைச்சி உண்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். சிக்கனைக் கொண்டு பல அற்புதமான ரெசிபிக்கள் தயாரிக்கப்படுகின்றன. சிக்கனின் விலை மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடும் போது குறைவாக இருப்பதால் ஏழைகளுக்கும் எட்டும் உணவாக கோழி இறைச்சி இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே அசைவ உணவு என்றாலே கோழி இறைச்சி என்ற எண்ணம் பொதுவாக பரவியிருக்கிறது. சிக்கன் சுவையானதாக இருப்பதோடு, சமைப்பதற்கு எளிதாகவும் இருக்கிறது. கொழுப்பு குறைவான சிக்கனில் புரதச்சத்து அபரிதமாக நிறைந்துள்ளது. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது, சிக்கனுக்கும் பொருந்தும்.


எதையும் அளவோடு சாப்பிட்டால் தான், அவற்றின் பலனை முழுமையாகப் பெற முடியும். மாறாக சிக்கனை தினமும் சாப்பிட்டால், உடலில் பல பாதிப்புகள் உண்டாகும். அதிக அளவில் சிக்கன் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும், இதய பாதிப்பை ஏற்படுத்தும்.  


Also Read | ஆண்மையை அதிகரிக்கும் முருங்கைக்கீரையின் சூப்பர் பவர்


மனிதர்களுக்கு தேவையான தினசரி கலோரியில் 10 முதல் 35 சதவீதம் வரை புரதச்சத்து இருக்க வேண்டும். அதிகளவில் புரதச்சத்து உடலுக்குச் சென்றால் அது கொழுப்புக்களாக தேங்க ஆரம்பித்து, உடல் எடை அதிகரிக்கிறது அடிக்கடியோ, தினசரியோ சிக்கன் சாப்பிட்டால், அது உடலுக்கு தேவையானதைவிட மிகவும் அதிகமான புரதத்தை சேர்த்துவிடலாம்.  


தினமும் சிக்கனை சாப்பிடுவது, உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகரிக்கும். அது, இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டாலும், அதிக புரதம் உடலுக்கு சென்றாலும், அது மறைமுகமாக இதய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.


அதுமட்டுமல்ல, சிக்கன் போன்ற விலங்கு அடிப்படையான புரதச்சத்தை அதிகமாக சாப்பிடுவது, உடல் எடையைப் பராமரிப்பதில் சிக்கல் ஏற்படுத்தலாம். தினமும் இறைச்சி சாப்பிடுபவர்களை விட சைவ உணவு உண்பவர்கள் குறைந்த BMI கொண்டுள்ளனர்.


Also Read | கை, பாதங்களில், டானிங்கை நீக்க எளிய வீட்டு குறிப்புகள்


சிக்கனைசரியாக சமைக்கவில்லை என்றாலோ, வேக வைக்காத சிக்கனுடன் காய்கறிகளை சாலடாக உண்டாலோ ஃபுட் பாய்சன் (food poison) னை ஏற்படலாம்.  


கோழி பண்ணைகளில் வளரும் கோழிகளுக்கு ஆன்டி-பயாடிக்குகளைப் போடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் இந்த சிக்கனை சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-பயாடிக் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே உடல்நிலை சரியில்லாத போது சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. எனவே உடல்நிலை சரியில்லாத போது சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது.


Also Read | இஞ்சி இடுப்பழகியாக இயற்கையான வழிமுறைகள் இதோ...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR