Health Tips: ஆண்மையை அதிகரிக்கும் முருங்கைக்கீரையின் சூப்பர் பவர்

ஊட்டச்சத்துக்களும் தாதுஊப்புக்களும் நிறைந்த கீரைகள் உடல்நலத்திற்கு உகந்தவை. அதிலும் முருங்கைக்கீரை, பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் அடங்கிய அமிர்தக்கீரை என்றே சொல்லலாம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 25, 2021, 01:05 PM IST
  • முருங்கைக் கீரையில் கலோரி மிகவும் குறைவு
  • புற்றுநோய், இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது
  • ரத்தசோகைக் கட்டுக்குள் வரும்
Health Tips: ஆண்மையை அதிகரிக்கும் முருங்கைக்கீரையின் சூப்பர் பவர் title=

சென்னை: பொதுவாகவே அனைத்து விதமான கீரைகளுமே ஊட்டச்சத்துக்கள், தாதுஊப்புக்களின் சுரங்கம் என்று சொல்லலாம்.  பசுங்கீரைகளில், வைட்டமின் சி, போலிக் அமிலம், பொட்டாசியம், மேக்னிசியம்,  நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பீட்டாகரோடின் நிறைந்துள்ளன.

அதிலும் முருங்கைக்கீரை, சத்துக்கள் அதிகம் கொண்ட பசுமையான கீரைகளின் பட்டியலில் முதல் ஐந்து இடத்திற்குள் வந்துவிடுகிறது.  

முருங்கைக் கீரையில் கலோரி மிகவும் குறைவு என்பதால், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்திருப்பதால்,  செரிமானப் பிரச்னைகளைத் தவிர்க்கிறது. புற்றுநோய், இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.  

Also Read | இந்தக் காய் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் நீர்க்காய்

குளோரோஜெனிக் அமிலம் எனப்படும் நிறமி இருப்பதால், முருங்கைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். உடலில் தேவையில்லாமல் சேர்ந்திருக்கும் கொழுப்பைக் குறைக்கவும் முருங்கைக்கீரை உதவும்

முருங்கைக் கீரையை வாரம் இரு முறை சாப்பிட்டால், எலும்பு, பற்கள் வலுப்பெறும், ரத்தசோகைக் கட்டுக்குள் வரும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆண்மையை அதிகரிக்கச் செய்யும். இயக்குநர் பாக்கியராஜின் முந்தானை முடிச்சு திரைப்படம் உடனே நினைவுக்கு வருகிறதா?

உடல் வெப்பத்தைத் தணிக்கும் முருங்கைக் கீரையை பருப்புடன் சேர்த்து கூட்டாக சேர்த்து சமைத்து சாப்பிட்டால், உடல் சூட்டினால் ஏற்படும் தலைவலி மாயமாய் மறையும். கை, கால் வலி, மூட்டுவலியைக் குணமாக்கும் முருங்கைக்கீரையை பொரியலாகவும் செய்து சாப்பிடலாம். 

Also Read | மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்

பார்வைத்திறனை மேம்படுத்தும் முருங்கைக்கீரை, செரிமானக் கோளாறு, மந்தத்தன்மை ஆகியவற்றைக் குறைக்கும்.

ஆயுர்வேத மருந்துகளில் ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் முருங்கைக்கீரையின் சாற்றைத் தலைக்குத் தேய்த்து குளித்துவந்தால், பொடுகுப் பிரச்னை தீரும். 

முருங்கையில் வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் ஏ, புரதம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் முக்கியமான அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு, ஆண்டிடிரஸன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. முருங்கைக்கீரையை காயவைத்து பொடியாக பயன்படுத்தலாம்.   

Also Read | மதிய உணவில் சாப்பிட ஏற்றது எது? தவிர்க்க வேண்டியவை எவை?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News