Papaya side effects: பொதுவாக பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பழங்கள், சிலருக்கு மட்டும் சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலை மலிவாக கிடைக்கும் பப்பாளி, சத்துக்களிலும், அது தரும் நன்மையிலும் மிகவும் மதிப்புமிக்கது. ஆனால், சிலர் பப்பாளிப் பழத்தை சாப்பிடக்கூடாது என்ற கட்டுப்பாடும் இருக்கிறது. அந்தக் கட்டுப்பாட்டை கடைபிடிக்காவிட்டால் ஆரோக்கியமான பப்பாளி, உடலுக்கு தீமைகளையும் செய்துவிடும்.


உணவே மருந்தாகும் என்பது உண்மை என்பதைப் போல, உணவே நோய்க்கும் மூலமாகும் என்பதையும் மறந்துவிடக்கூடாது...


ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம் எனக்கூறப்படும் பப்பாளியில் வைட்டமின்கள், நார்ச்சத்து (Vitamins and Fibre) மற்றும் பல தாது சத்துக்கள் உள்ளன, எல்லா பருவத்திலும் எளிதாகக் கிடைக்கும் பப்பாளியில் உள்ள நார்ச்சத்து உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பது மட்டுமின்றி, எடையைக் குறைக்கவும் உதவுகிறது. சரி யாரெல்லாம் பப்பாளியை சாப்பிடக்கூடாது?


READ ALSO | ஆரோக்கியமான விந்தணுவிற்கு உத்தரவாதம் தரும் பழம்


கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடக்கூடாது
கர்ப்ப காலத்தில் பெண்கள் பப்பாளி சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பப்பாளியில் இனிப்பு மற்றும் லேடெக்ஸ் உள்ளது, இது கருப்பையை சுருங்கச் செய்பவை. இதன் காரணமாக, பிரசவம் முன்கூட்டியே நடக்கும். இது தவிர, பப்பாளியை உட்கொள்வது கருவை பாதுகாக்கும் கருப்பையின் சவ்வை பலவீனப்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக, லேடெக்ஸ் சத்து பழுக்காத பப்பாளியில் இருப்பதால், பப்பாளியை காயாக சமைத்து சாப்பிடுவதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.


இதயத்துடிப்பு பிரச்சனை உள்ளவர்கள்
இதயத் துடிப்பு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் என்றால், பப்பாளியை சாப்பிடக்கூடாது. பப்பாளியில் சயனோஜெனிக் கிளைகோசைடு என்ற அமினோ அமிலம் உள்ளது. இது  ஹைட்ரஜன் சயனைடை உற்பத்தி செய்கிறது. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், ஏற்கனவே ஒழுங்கற்ற இதயத் துடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு மிகவும் ஆபத்தானது. அதேபோல ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்களும் பப்பாளி சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.


சிறுநீரகக் கற்கள் 
வைட்டமின் சி பப்பாளியில் அதிக அளவில் காணப்படுகிறது, இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகவும் உள்ளது. பப்பாளியை அதிக அளவில் உட்கொண்டால், அது சிறுநீரகத்தில் கற்களை (Kidney Stones) அதிகரிக்கும். ஏற்கனவே இருக்கும் கல்லையும் கரையவிடாது. இது சிறு கற்கள் சிறுநீர் வழியாக கற்களை வெளியேற்றுவதற்கு முட்டுக்கட்டை போடும்.  


சரும அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்கள்
தோல் அலர்ஜியால் அவதிப்படுபவர்கள், பப்பாளியை சாப்பிடக்கூடாது, ஏனெனில் பப்பாளியில் சிட்டினேஸ் என்ற நொதி உள்ளது. இதன் காரணமாக சரும அலர்ஜி உள்ளவர்களுக்கு தும்மல், சுவாசிப்பதில் சிரமம், இருமல், கண்களில் நீர் வடிதல் போன்றவை ஏற்படலாம். இது தோல் வெடிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.


ரத்தக் கொதிப்பு நோயாளிகள்
ரத்தக் கொதிப்பு நோய்க்காக மருந்து சாப்பிடுபவர்கள் பப்பாளியை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. இது ரத்த சர்க்கரை அளவு குறைவதற்கு வழிவகுக்கும்.


Also Read | 2 வாரங்களில் எடையை 6 கிலோ குறைக்க வேண்டுமா? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR