MILLET: கோதுமையை விட 6 மடங்கு நார்ச்சத்து கொண்ட குதிரைவாலியின் நன்மைகள்
பி-கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், பி-கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின் என பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ள குதிரைவாலியில் கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது
தானிய வகைகளில் ஒன்றான குதிரைவாலி சிறப்பு குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. ஆனால், மிளகாய் சிறிதென்றாலும் காரம் பெரிது என்பதுபோல், சிறிதாக இருக்கும் குதிரைவாலி நமக்குத் தரும் நன்மைகள் அளப்பரியது.
பி-கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், பி-கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின் என பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ள குதிரைவாலியில் கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது என்றால் இதன் மகிமையை புரிந்துக் கொள்ளலாம்.
சர்க்கரை நோயைக் (Diabetes) கட்டுப்படுத்தும் தன்மையைக் கொண்டது குதிரைவாலி. செரிமான குறைபாடுகளையும் (Digestion problem), ரத்தசோகையையும் (Anemia) குணப்படுத்துகிறது.
சிறுநீரை பெருக்கி, உடலில் உள்ள அதிகப்படியான உப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது குதிரைவாலி. இதிலுள்ள பீட்டா கரோட்டின், கண் குறைபாடுகளை சீர் செய்யும் வல்லமை கொண்டது.
Also Read | Healthy Food: ராகியை நீங்கள் மிஸ் செய்தால் ஆரோக்கியம் உங்களுக்கு டாட்டா காட்டும்!
ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளதால் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவாக பயன்படும் குதிரைவாலியை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நூறு கிராம் குதிரைவாலியில் 6.2 கிராம் புரத சத்து, 2.2 கிராம் கொழுப்பு சத்து , 4.4 கிராம் தாது உப்புகள், 9.8 கிராம் நார்ச்சத்து, 65.5 கிராம் மாவுச்சத்து, 11 மில்லிகிராம் கால்சியம், 280 மில்லிகிராம் பாஸ்பரஸ் இருக்கிறது.
உடலைச் சீராக வைக்க உதவும் குதிரைவாலி, ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்டாக வேலை செய்வதுடன், ரத்தசோகை வராமல் தடுக்கிறது. மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத்திற்கும் உதவும் குதிரைவாலியை தொடர்ந்து சாப்பிட்டால் ஆரோக்கியத்தை உறுதி செய்யலாம்.
Also Read | சிறுதானியங்களின் முடிசூடா மன்னன் கம்பு, நோய்களுக்கு இது தரும் வம்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR