Millet: சிறுதானியங்களின் முடிசூடா மன்னன் கம்பு, நோய்களுக்கு இது தரும் வம்பு

ஊட்டச்சத்துக்களின் புதையல் கம்பு. புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்துள்ளன...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 14, 2021, 05:29 PM IST
  • ஊட்டச்சத்துக்களின் புதையல் கம்பு
  • தினமும் கம்பு கூழ் குடித்து வந்தால் உடல் சூடு தணியும்
  • மலசிக்கல் பிரச்சனையை தீர்க்கும் கம்பு
Millet: சிறுதானியங்களின் முடிசூடா மன்னன் கம்பு, நோய்களுக்கு இது தரும் வம்பு title=

சிறுதானியத்தில் ஒன்றான கம்பு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உலகிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த உணவுகளில் ஒன்று கம்பு. தொடர்ந்து கம்பு உணவை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.   

கம்பு ஊட்டச்சத்துக்களின் புதையல் என்றே சொல்லலாம். புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு என பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

வேறு எந்த உணவை விடவும் அதிகமாக கம்பு உணவுகளில் அதிக அளவு புரத சத்து நிறைந்துள்ளது. இவை உடலிற்கு வலுவளித்து ஆரோக்கியமான உடல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. 100 கிராம் கம்பில் கிட்டத்தட்ட 15 கிராம் அளவிற்கு புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. புரதச்சத்து இந்த அளவு வேறு எந்த தானியத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Also Read | சூட்டைத் தணிக்க உதவும் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் அற்புதங்கள்

கம்பில் மிகவும் அதிக அளவில் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. தொடர்ந்து கம்பு உணவை உண்டு வந்தால், ரத்தசோகை மற்றும் முடி கொட்டுதல் போன்ற பிரச்சினை ஏற்படாது.  

நமது மாறிப்போன உணவுமுறை காரணமாக உடல் சூடு பிரச்சனை அதிகரித்துவிட்டது. தினமும் சிறிது அளவு கம்பு கூழ் குடித்து வந்தால் உடல் சூடு தணியும். உடல் சூட்டைத் தணிக்க, இந்த கோடைக் காலத்தில் கம்பங்கூழுக்கு நிகரான உணவு வேறு எதுவுமே இல்லை.  

கம்பங்கூழில் அதிக அளவு நார்ச்சத்தும், குறைந்த அளவு கொழுப்பு சத்தும் நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும். எனவே காசு செலவில்லாமல் எடையினை குறைக்க விரும்புவார்கள் கம்பு உணவை தினமும் ஒரு வேளை எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும்.  

Also Read | கோவிட் ஏற்படாமல் தடுக்கும் கிவி பழத்தின் சூப்பர் நன்மைகள்!

கம்பில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. தினசரி உணவில் கம்பு சேர்த்துக் கொண்டால், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை ஏற்படாது.  

தவறான உணவு பழக்கங்களின் விளைவாக மலசிக்கல் பிரச்சனை அதிகமாகிவிட்டது. ல் நார்சத்து நிறைந்துள்ள கம்பை சாப்பிட்டால், மலசிக்கல் பிரச்சனை தீர்ந்துப் போகும்.
 
கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் (glycemic index) உள்ளதால் இதனை உண்ணும்பொழுது சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கலாம். எனவே தினசரி கம்பு உணவை உண்டு வந்தால் சர்க்கரை வியாதி வராமல் தடுக்கலாம்.

Also Read | Vitamin D எடுத்துக் கொண்டால் கொரோனா வைரஸ் அபாயம் குறையுமா? உண்மை இதுதான்…

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News