ஆச்சரியமான உண்மை! புற்றுநோய் முதல் வாதம் வரை குணமாக்கும் உணவு எது தெரியுமா?
பச்சை மிளகாய் சாப்பிடுவதால் ஏற்படும் அளப்பறிய நன்மைகளைத் தெரிந்துக் கொண்டால் வியப்பாக இருக்கும். புற்றுநோய் முதல் கீல்வாதம் வரை குணமாக்கும் அருமருந்து பச்சை மிளகாய்…பச்சை மிளகாயில் இருக்கிறது சிறந்த anti-oxidant.பச்சை மிளகாயில் உள்ள அபரிதமான உணவு இழைகள் (Dietary fibers) செரிமான செயல்முறையை சீராக வைத்திருக்கும்.
புதுடெல்லி: பச்சை மிளகாய் சுவையூட்டும் பொருள் மட்டுமல்ல மற்றும் நமக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் சிறந்த பண்புகளையும் கொண்டுள்ளது. பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, பி 6, சி, இரும்பு, தாமிரம், பொட்டாசியம், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
இது மட்டுமல்லாமல், பீட்டா கரோட்டின், கிரிப்டோக்சாண்டின், லுடீன்-சாந்தைன் (beta carotene, cryptoxanthin, lutein-xanthin) போன்ற ஆரோக்கியமான விஷயங்களும் உள்ளன. பச்சை மிளகாய் சாப்பிடுவதால் ஆரோக்கியம் மேம்படும்.
பச்சை மிளகாய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கியத்திற்கான நன்மைகளை பட்டியலிட்டாலும் அது போதாது.
பச்சை மிளகாயில் போதுமான அளவு வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் சி, பிற வைட்டமின்கள் உடலில் சரியாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
பச்சை மிளகாயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டின் ஆரோக்கியத்திற்கு அனுகூலமானது. பச்சை மிளகாயில் உள்ள அபரிதமான உணவு இழைகள் செரிமான செயல்முறையை சீராக வைத்திருக்கும்.
விட்டமின் ஏ நிறைந்த பச்சை மிளகாய் கண்களுக்கும் சருமத்திற்கும் அதிக நன்மை பயக்கும்.
கீல்வாதம் பாதித்தவர்களுக்கு பச்சை மிளகாய் மிகவும் நன்மை பயக்கும். அதுமட்டுமா? உடல் பாகங்களில் வலியைக் குறைக்கவும் இது உதவியாக இருக்கும்.
பச்சை மிளகாய் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும் உடலைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது. இதில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.
பச்சை மிளகாயை சாப்பிடுவதால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் குறைகிறது. புகைபிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதால், பச்சை மிளகாயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இனிமேல் பச்சை மிளகாயை ஒதுக்காமல், விரும்பி சாப்பிடுங்கள். பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்.
Also Read | கொய்யா இலைகளால் நன்மைகள் கோடி! பொய்யா வாக்கு இது!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR