உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் மிகவும் முக்கியமானது. உரிய நேரத்தில் உணவு உட்கொள்ள முடியவில்லை என்றால் ஒரு வாழைப்பழம் இருந்தால் நன்று என தோன்றும். முக்கனிகளில் ஒன்றான வாழை உலகில் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழைக்கு ஏன் வாழை என்று பெயர் வந்தது தெரியுமா? பெயர் என்பது ஒரு மனிதரையோ, பொருளையே அடையாளம் காண உதவும் ஒன்று. பொருட்களுக்கும், காய் கனிகளுக்கும் ஏதாவது ஒரு விஷயத்தின் அடிப்படையில் பெயரிடுவார்கள். இந்தப் பழத்திற்கு வாழை என்று பெயர் சூட்ட சொல்லப்படும் காரணங்களில் ஒன்று சுவராசியமானது. 


குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை தற்போது இன்குபேட்டரில் வைத்து பாதுகாத்து உயிர் பிழைக்க வைப்பது அனைவரும் அறிந்ததே. தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை, வாழையிலையில் வைத்து பாதுகாப்பார்களாம். ஒரு வாழையில் பிறந்த சிசுவை வைத்து, மற்றொரு வாழையிலையை மேற்புறமாக போர்த்தி வைத்தால் குழந்தை பிழைத்துவிடும். 


அதேபோல, வாழையிலையில் உள்ள மருத்துவ பண்புகள், நோய்களை விரைவில் குணமாக்கும். குளிர்ச்சியான தன்மை கொண்ட வாழையிலை, தீக்காயம் பட்டவர்களை படுக்க வைக்கவும் பயன்படுத்தப்படும். இப்படி உயிரை காத்து வாழ வைக்கும் தன்மையைக் கொண்டதால் இந்த தாவரத்திற்கு வாழை என்று பெயர் வந்ததாம். 


ALSO READ | செவ்வாழையின் சூப்பர் நன்மைகள்! யார் இதை சாப்பிடக்கூடாது?


வாழை, காட்டு வாழையாக இருந்தாலும் சரி, வீட்டு வாழையாக இருந்தாலும் சரி, அது உண்பதற்கு உகந்தது. உலக வாழை உற்பத்தியில் இந்தியா 24% பங்களிக்கிறது. வாழை விவசாயம் செய்ய தண்ணீர் மிகவும் முக்கியமானது. வாழை சாகுபடிக்கு தண்ணீர் அதிகம் தேவை என்றாலும், மிகவும் இயல்பாக எல்லா இடங்களிலும் வாழ்வது வாழை.


வாழைப்பழத்தில் மாக்னீசியம் சத்து அதிகமாக உள்ளது. வாழைப்பழத்தை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்றாலும், காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரித்து, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. 


வாழையடி வாழை என்பது வாழ்த்துச் சொல்லாக இருந்தாலும், வாழையைப் போல் சுலபமாக எளிதாக வாழ்க என்பதை வாழ்த்துவதற்கு அடிப்படையாக இருப்பது வாழை. பழங்களுக்காகவே வாழை முதன்மையாக பயிரிடப்பட்டாலும், வாழையின் ஒவ்வொரு பாகமும் நமது தினசரி பயன்பாட்டுக்கு உகந்தவை. டுகிறது எனினும் சிலவேளைகளில் அலங்காரச்செடியாகவும் நார் பெறுவதற்காகவும் வேறு தேவைகளுக்காவும் வாழை பயிரிடப்படுகிறது. 


வாழை குலை தள்ளிவதும், அது மடமடவென்று வளர்ந்து தாராக காய்த்து நிற்பதும் பார்க்கவே பரவசம் தரக்கூடியது. வாழையின் இலைகள், தண்டு, பூ, காய், கனி என அனைத்துமே நமக்கு பயன்படுகிறது என்றால், மறுபுறம் விரைவில் மக்கி, சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும். 


ALSO READ | வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வரும் தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR