வயதாவதால் மூளைக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு டார்க் சாக்லேட் உண்பது தீர்வாக அமைய வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகத்தில் சாக்லேட் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா?. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அதன் சுவைக்கு அடிமை என்றே கூறலாம். சாக்லேட் நமது வாழ்வில் ஒரு அங்கமாக விளங்குகிறது. குழந்தை பிறந்தால் சாக்லெட், நடந்தால் சாக்லெட், முதன் முதலில் ஸ்கூலுக்கு போனால் சாக்லேட், பாஸ் ஆனால் சாக்லேட் என எல்லாவற்றிற்கும், ஸ்வீட் எடு கொண்டாடு என்ற ரீதியில், சாக்கலேட்டை உண்ணுகிறோம்.


சாக்லேட் பல நன்மைகளை நமக்கு கொடுக்கிறது. இன்று பல வித சுவைகளில் கிடைக்கும் சாக்லேட்கள் தனித்துவம் பெற்றவை. இதன் விலையும் மலிவாக இருப்பதால் அனைவராலும் உண்ணப்படுகிறது. சில வகை சாக்லேட்கள் கசப்புத்தன்மையுடன் இருக்கும்.



எப்படி இருந்தாலும் சாக்லேட்கள் உண்ணும் போது உடலுக்கு ஒரு ரிலாக்ஸ் உணர்வு கிடைக்கிறது. அதிலும் இந்த டார்க் சாக்கலேட்களுக்கு உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைக்கும் தன்மை இருக்கிறது. 


வயதாவதால் மூளைக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு டார்க் சாக்லேட் உண்பது தீர்வாக அமைய வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. முதியவர்களுக்கு மூளையில் ஏற்படும் அழுத்தமும், வீக்கமும் தான் அல்சைமர் போன்ற நோய்க்கு காரணமாக அமைகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், எலிகள் மீது நடத்திய ஆராய்ச்சியில், எபிகேடசின் என்ற பொருள் டார்க் சாக்லேட்டில் உள்ளதாகவும், அது இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவதாகவும் கண்டுபிடித்துள்ளனர். 



இதனால், ஞாபக சக்தியும் அதிகரிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மனஅழுத்தம் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு ஆற்றலும் சாக்லெட் சாப்பிடுவதால் கிடைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஒரு கடி அளவு சாக்லெட் உங்களுக்கு 150 அடிகள் நடக்கும் ஆற்றலைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது!