Harmful Food: நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் இவை...
நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் பல இருந்தாலும், தினசரி பயன்படுத்தும் இந்த உணவுப்பொருட்களால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகம். எனவே, இந்த உணவுப் பொருட்களை தேவையான அளவு மட்டுமே பயன்படுத்தவும்...
புதுடெல்லி: நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று நுரையீரல். நாம் சுவாசிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நுரையீரல், ஆக்ஸிஜனை வடிகட்ட வேலை செய்கிறது. நமது நுரையீரலை பாதுகாப்பாக வைத்திருக்க என்னென்ன விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டால், வாழ்க்கை சுலபமாகும்.
நுரையீரலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருங்கள். நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் பல இருந்தாலும், தினசரி பயன்படுத்தும் இந்த உணவுப்பொருட்களால் (Food Habit) ஏற்படும் பிரச்சனைகள் அதிகம். எனவே, இந்த உணவுப் பொருட்களை தேவையான அளவு மட்டுமே பயன்படுத்தவும். அதிகம் உட்கொண்டால் ஆபத்து அதிகரிக்கும்!
நுரையீரல் சேதமடைந்தால், நமது உடலுக்கு தூய ஆக்ஸிஜன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். ஏற்கனவே கொரோனா காலத்தில் நுரையீரல் ஆரோக்கியம் பரவலாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது, அதற்கான கவனம் அவசியம். ஏனெனில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டது நுரையீரல் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த நிதர்சனமான உண்மை.
READ ALSO | ஆண்களுக்கு அபார நன்மைகளைத் தரும் அத்திப்பழம்
எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க, நுரையீரல் எந்த இடையூறும் இல்லாமல் வேலை செய்வது அவசியம். நுரையீரல் சுருங்குவதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான உணவுமுறை அவசியம் என்று உணவு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி, புகைபிடித்தல், புகையிலை, சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் அதிக மது அருந்துதல் ஆகியவை நுரையீரலுக்கு எதிரிகள் ஆகும். எனவே அவற்றின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இவற்றைத் தவிர, பொதுவாக நுரையீரல் பாதுகாப்புக்கு மேற்கொள்ள வேண்டிய பழக்கங்கள்....
உப்பு
உப்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்றாக இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்க வேண்டாம். ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் அதிகமாக உப்பை உட்கொண்டால், நுரையீரலில் பிரச்சனை ஏற்படும். நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க, உப்பை குறைத்துக் கொள்ளவும்.
சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை தவிர்க்கவும்
சர்க்கரை கலந்த பானங்கள் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர், ஏனெனில் அவை பெரியவர்களுக்கு மூச்சுக்குழாய் அழற்சியை ஏற்படுத்தும். எனவே சர்க்கரை கலந்த பானங்களுக்குப் பதிலாக, முடிந்தவரை தண்ணீர் குடிக்கவும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பதப்படுத்தப்பட்ட இறைச்சி நுரையீரலுக்கு நல்லதல்ல என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இறைச்சிகளை பாதுகாக்க, நைட்ரைட் சேர்க்கப்படுகிறது, இது நுரையீரலுக்கு வீக்கம் மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியது. எனவே, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
பால் பொருட்கள்
பால், தயிர், பனீர், பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை (Good for Health) பயக்கும் என்றாலும், அவற்றை அதிகமாக உட்கொள்ளத் தொடங்கினால், அவை நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே பால் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டாம்
அதிகப்படியான மது
குடி, குடியை கெடுக்கும் என்பது வழக்கமாக சொல்லப்படும் பழமொழியாக இருந்தாலும், குடி நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உண்மையான விஷயம். மதுவில் உள்ள சல்பைட்டுகள் ஆஸ்துமாவை அதிகரிக்கும். நுரையீரலை சேதப்படுத்தும் எத்தனால் மதுவிலும் இருப்பதால், அதிகப்படியான மது அருந்துவதை தவிர்த்தால், உங்கள் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
(இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றானவை இல்லை. விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது).
ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR