Healthy Fruit: ஆண்களுக்கு அபார நன்மைகளைத் தரும் அத்திப்பழம்! இவ்வளவு நாள் தெரியாம போச்சே?

அத்திப்பழத்தின் மகத்துவம் தெரிந்தால் இதை தினசரி சாப்பிடாமல் இருக்க மாட்டீர்கள்! அத்தியின் அளப்பரிய பலன்கள்...  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 24, 2021, 10:44 AM IST
  • அபார நன்மைகளின் உறைவிடம் அத்தி
  • ஆண்களுக்கு அத்திப்பழம் இவ்வளவு நல்லது செய்யுமா?
  • பருமனைக் குறைக்கும் அத்திப்பழம்
Healthy Fruit: ஆண்களுக்கு அபார நன்மைகளைத் தரும் அத்திப்பழம்! இவ்வளவு நாள் தெரியாம போச்சே?  title=

புதுடெல்லி: அத்திப்பழத்தை உட்கொள்வது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அத்திப்பழத்தின் நன்மைகள் மற்றும் அவற்றை உட்கொள்ளும் முறை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்... 

அத்திப்பழத்தில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்
துத்தநாகம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு போன்ற தாதுக்கள் அத்திப்பழத்தில் (Healthy Fruit) காணப்படுகின்றன. இது தவிர, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்தும் அத்திப்பழத்தில் ஏராளமாக உள்ளது. இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின்கள், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட், நார்சத்து மற்றும் போதுமான கலோரிகளும் இதில் உள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு நன்மை பயப்பவை. 

ஊறவைத்த 3 அத்திப்பழங்களை தினமும் சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொண்டால் பல நோய்கள் விலகும். அத்திப்பழத்தை தொடர்ந்து உண்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

ALSO READ | வறுத்த பூண்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

அத்திப்பழத்தை தொடர்ந்து உட்கொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்படாது. ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதும் உடல் எடையை (Weight Loss) குறைக்க உதவுகிறது.அத்திப்பழத்தை சாப்பிட்டால், அதிலிருக்கும் சத்துக்களானது நீண்ட நேரம் பசியை தாங்கும் சக்தியைக் கொடுக்கும்.

இதயம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாய் விளங்குகிறது அத்திப்பழம். நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் பயனுள்ள அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ரத்த அழுத்தத்தைக் (Blood Pressure) கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

fruit

அத்திப்பழத்தை பல விதங்களில் சாப்பிடலாம் என்றாலும், இந்த அருமையான பழத்தை சாப்பிட சரியான வழி என்ன? 

உலர்ந்த அத்திப்பழங்களை தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஊறவைத்த அத்திப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இது உங்கள் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அதேபோல, இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னதாக, அத்திப்பழத்தை பாலில் கலந்து சாப்பிடலாம். அத்திப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, எனவே இது பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இது தவிர, அத்திப்பழத்தை உட்கொண்டால் நீண்ட காலத்திற்கு இளமையாக இருக்கலாம். 

இதில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் (Minerals and nutritients) புதிய செல்களை உருவாக்குகின்றன. குறிப்பாக, தொடர்ந்து அத்திப்பழத்தை சாப்பிடும் ஆண்களின் முகத்தில் சுருக்கங்கள் இருக்காது. கூடுதலாக, ஆண்களின் விந்துக்களின் தரத்தை மேம்படுத்துகிறது.

(இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றானவை இல்லை. விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது).

ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News