புதுடில்லி: சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர், ஆயுர்வேத முதுகலை (PG) மாணவர்களுக்கு எலும்பியல், கண் மருத்துவம், ஈ.என்.டி மற்றும் பல் உள்ளிட்ட பல்வேறு பொது அறுவை சிகிச்சைகளை செய்ய அனுமதி அளிப்பதாக அரசாங்கம் அறிவித்ததிலிருந்தே நாட்டில் மருத்துவ வல்லுநர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது, ​​இந்திய மருத்துவ சங்கம் (IMA) டிசம்பர் 11 (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் பணிநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளது.


IMA-வின் வேண்டுகோளின் படி, அவசரகால சேவைகள் மற்றும் COVID சேவைகள் அல்லாத மற்ற அனைத்து மருத்துவ சேவைகளும் டிசம்பர் 11 வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும். வெளிநோயாளிகள் பிரிவுகளும் (OPD) மூடப்பட்டிருக்கும்.


ஐ.சி.யுக்கள், சி.சி.யுக்கள் மற்றும் அவசர வார்டுகள் செயல்பாட்டில் இருக்கும். ஆனால் அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும்.


மத்திய இந்திய மருத்துவ கவுன்சில் (CCIM) நவம்பர் 22 ம் தேதி வெளியிட்ட தனது அறிவிப்பில், ஆயுர்வேதத்தின் முதுகலை பட்டதாரிகளுக்கு பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், கண் மருத்துவம், ஈ.என்.டி மற்றும் பல் நடைமுறை பயிற்சிகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை மெற்கொள்ள அனுமதித்தது.


மத்திய அரசின் (Central Government) அறிவிப்புக்கு எதிராக, கலப்பு மருத்துவ முறையின் (Mixopathy) அபாயங்கள் இருப்பதாகக் கூறி, மருத்துவர்கள் இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.


ALSO READ: கோவிட் -19 டெஸ்ட்களில் இத்தனை வகைகளா?


எவை எல்லாம் மூடப்பட்டிருக்கும்?


அனைத்து கிளினிக்குகள், அவசரகால சுகாதார நிலையங்களைத் தவிர மற்ற சுகாதார நிலையங்கள், OPD கள், எலெக்டிவ் அறுவை சிகிச்சைகள்.


எவை பணியில் இருக்கும்?


அவசர மருத்துவ சேவைகள், ஐ.சி.யுக்கள், சி.சி.யுக்கள், COVID பராமரிப்பு வசதிகள், அவசர அறுவை சிகிச்சைகள், பிரசவ வார்டுகள்.


இது தொடர்பான மற்ற தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 


ALSO READ: COVID-19 தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்கு சுமார் 3 லட்சம் அபராதம்: எங்கே?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR