டிமென்ஷியா என்பது நினைவாற்றல், சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறன் போன்ற மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும் ஒரு நிலை. மறதி வயதானவர்களுக்கு மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.  இதைத் தவிர, இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள்கூட மறதியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயது ஏற ஏற மறதி நோய்க்கான அறிகுறிகள் மிகவும் பொதுவானவை என்றாலும், சில மருந்துகள் இந்த நோயின் அபாயத்தை பெருமளவு அதிகரிக்கலாம் என எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். நாம் அடிக்கடி பயன்படுத்தும் சில பொதுவான மருந்துகள் இதில் அடங்கும். பொதுவாகவே, எந்த ஒரு மருந்தையும, மருத்துவர் ஆலோசனையின்றி அடிக்கடி எடுத்துக் கொள்வது மிகவும் தவறு.


சில மருந்துகள் உடனடி பக்க விளைவு எதுவும் ஏற்படுத்தாத நிலையில் பாதுகாப்பானதாகத் தோன்றினாலும், அவற்றை நீண்ட காலம் உட்கொள்வது மூளையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். மூளை ஆரோக்கத்தை (Brain Health) பாதித்து , டிமென்ஷியாவை ஏற்படுத்தும் அந்த ஐந்து பொதுவான மருந்துகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


பெனாட்ரில்  (Benadryl)


பெனாட்ரில் ஒரு பொதுவான ஆண்டிஹிஸ்டமைன் ஆகும். இது ஒவ்வாமை மற்றும் இருமல் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த மருந்து மூளையைப் பாதிக்கும் மற்றும் வயதானவர்களுக்கு டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக வயதானவர்களுக்கு இது பெரிய ஆபத்தை உருவாக்கும்.


டிரைசைக்ளிக் ஆண்டிடிப்ரஸண்ட்ஸ்  (Tricyclic Antidepressants) 


 நாள்பட்ட மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும், அமிட்ரிப்டைலைன் மற்றும் இமிபிரமைன் போன்ற ட்ரைசைக்ளிக் ஆண்டிடிப்ரஸண்ட்ஸ் மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளை பாதிக்கிறது. நீண்ட காலம் இதனை தொடர்ந்து சாப்பிடுவது மூளையை பலவீனப்படுத்தலாம். இது டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கிறது.


ஓபிபேட்ஸ் (Opiates) 


மார்பின், கோடீன் மற்றும் ஹைட்ரோகோடோன் போன்ற ஓபியாய்டுகள் வலி நிவாரணிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகளை நீண்டகாலமாக உட்கொள்வது மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும். ஓபியாய்டுகள் மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளையும் பாதிக்கின்றன. இது டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கும்.


மேலும் படிக்க |  மூளையும் உடலும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க... தினம் காலையில் நெல்லிக்காய் ஜூஸ்


பென்சோடியாசெபைன்கள் (Benzodiazepines)


டயஸெபம் (Valium) மற்றும் அல்பிரஸோலம் (Xanax) போன்ற பென்சோடியாசெபைன்கள் மனக்கவலை மற்றும் தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன. இந்த மருந்துகள் உடனடி நிவாரணம் அளித்தாலும், நீண்ட காலப் பயன்பாடு நினைவாற்றல் இழப்பு, மனநலக் கோளாறு மற்றும் டிமென்ஷியா போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.


ஒமேப்ரஸோல் (Omeprazole) 


ஒமேப்ரஸோல் என்பது ஒரு புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர் ஆகும். இது இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) போன்ற வயிற்றுப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இந்த மருந்து வயிற்றில் அமிலத்தன்மையைக் குறைக்கிறது. ஆனால் இதனை தொடர்ந்து நீண்ட காலத்ஹிற்கு பயன்படுத்துவது மூளையையும் பாதிக்கலாம். என்கின்றனர் நிபுணர்கள், டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கும்.


மேலும் படிக்க | முருங்கை இலையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்க... உடம்பு தெம்பாகும் - இந்த 4 நன்மைகள் கிடைக்கும்!


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ