Side Effects of Antibiotics: நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என்னும் ஆண்டிபயாடிக் மருந்துகள் பாக்டீரியா தொற்றுகளை அகற்றவும் தடுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. பாக்டீரியா தொற்றுகளை நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால், அதனை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இஷ்டத்திற்கு பயன்படுத்துவது மிகவும் ஆபத்து.
நோய்க்கான சிகிச்சையின் போது, மருத்துவர் அறிவுரைப்படி, மருந்துகளை சரியான அளவில், சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதோடு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றினால், மருந்துகள் முற்றிலும் பாதுகாப்பானவை. ஆனால், தாங்களாகவே மருந்துகளை உட்கொள்ளத் தொடங்குவது பிரச்சனைகளை அதிகரிக்கின்றன. இது குறித்து வெளியான சமீபத்திய ஆய்வுகளும் இதையே (Health Alert) வலியுறுத்துகின்றன.
சமீபகாலமாக, ஆண்டிபயாடிக் மருந்துகளின் தீவிர பக்க விளைவுகள் குறித்த தகவல்கள் அடிக்கடி வெளியாகின்றன. அந்த வகையில், தென் கொரியாவின் சியோல் தேசிய பல்கலைகழக மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், நீண்ட கால நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு பார்கின்சன் நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 2,98,379 பேர் பங்கேற்றனர். இந்த ஆய்வு நரம்பியல் மருத்துவப் பயிற்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்டிபயாடிக் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள்
ஆய்வில் வெளியான முடிவுகள் மூம்லம், 121 நாட்களுக்கு மேல் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்பவர்களுக்கு பார்கின்சன் நோய்க்கான ஆபத்து 29 சதவீதம் அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 1 முதல் 14 நாட்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்துபவர்களுடன் ஒப்பிடும்போது, 121 நாட்கள் அல்லது அதற்கு மேல் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு பார்கின்சன் நோய்க்கான ஆபத்து 37 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பார்கின்சன் நோய் என்பது என்ன
மூளை பாதிப்பினால் ஏற்படும் பார்கின்சன் நோய் என்பது ஒரு நரம்பியல் கோளாறு ஆகும். இது உடல் இயக்கத்தை பாதிக்கிறது. இதில் கைகளில் நடுக்கம், தசை விறைப்பு, சமநிலை பிரச்சனைகள் ஆகியவை அடங்கும். இந்த நோய் முக்கியமாக மூளையில் உள்ள டோபமைன் என்ற வேதிப்பொருளின் குறைபாட்டால் ஏற்படுகிறது. தசைகளின் இயக்கத்தை கட்டுப்படுத்த, டோபமைன் மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | எச்சரிக்கை... டீ - காபி அதிக சூடாக குடிப்பீர்களா... புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும்
குடல் மற்றும் மூளை பாதிப்புகள்
ஹைதராபாத், இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணரான டாக்டர். சுதிர் குமார், பார்கின்சன் நோயுடன் தொடர்புடைய முக்கிய காரணியாக குடல் மைக்ரோபயோட்டாவை மேற்கோள் காட்டி, தனது X தள பதிவில் ஆய்வை விளக்கினார். "ஆன்டிபயாடிக் பயன்பாடு குடல் நுண்ணுயிரிகளில் மாற்றங்களை ஏற்படுத்தும், மேலும் இந்த மாற்றங்கள் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்," மேலும் அவர் கூறினார், ஆண்டிபயாடிக்குகளின் நீண்டகால பயன்பாடு மூளையில் நியூரோடாக்ஸிக் விளைவுகளை ஏற்படுத்தும். இது மூளை தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
Extended usage of antibiotics is linked to a higher risk of Parkinson's disease
In a recent study, the following observations were made:
1. PD risk was statistically higher (29% higher) in those exposed to antibiotics for ≥121 days than in those not exposed to antibiotics.… pic.twitter.com/FMemmmePXg— Dr Sudhir Kumar MD DM (@hyderabaddoctor) November 18, 2024
மருத்துவ நிபுணர்களின் கருத்து
நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் டாக்டர் குமார் அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில் அவற்றின் நீண்டகால பயன்பாடு ஆரோக்கியத்தில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். உடல்நலம் தொடர்பான எந்தவொரு நோய்க்கும் சிகிச்சையளிக்க, மருந்துகளை தாங்களாகவே நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எடுக்கத் தொடங்குவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த ஆண்டிபயாடிக் மருந்தையும் உட்கொள்வது அல்லது இந்த மருந்துகளை அளவுக்கதிகமாக உட்கொள்வது மூளை பாதிப்பு மட்டுமின்றி, உடலில் பல நோய்களையும் உண்டாக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ