பச்சை தண்னீரில் குளித்தால் நோய் எதிர்ப்பு சக்தி பக்காவா இருக்குமா? உண்மை என்ன?
Bathing in Cold Water: குளிப்பது உடலின் நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை அதிகரிக்கிறது என கூறப்படுகின்றது. குளிர்ந்த நீரில் குளிப்பதால் நம் உடலுக்கு புதிய உந்துதல் கிடைக்கின்றது.
Bathing in Cold Water: குளிப்பது ஒரு இனிமையான விஷயம். இதன் மூலம் நம் உடலில் உள்ள அழுக்குகள் நீக்கப்படுவதோடு இன்னும் பல நன்மைகளும் ஏற்படுகின்றன. இதன் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கின்றது. குளியல் உடலில் உள்ள உஷ்ணத்தையும் குறைக்கின்றது. குறிப்பாக குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.
குளிப்பது உடலின் நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை அதிகரிக்கிறது என கூறப்படுகின்றது. குளிர்ந்த நீரில் குளிப்பதால் நம் உடலுக்கு புதிய உந்துதல் கிடைக்கின்றது. குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக பலர் கருதுகிறார்கள். ஆனால், இது உண்மையா? குளிர்ந்த நீரில் குளிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
குளிர்ந்த நீரில் குளிப்பது பற்றி பல கருத்துகள் உள்ளன. குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடலுக்கு நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தி கிடைப்பதாக பலர் நம்புகிறார்கள். குளிர்ந்த நீர் உடலைச் சுறுசுறுப்பாக்கி, நோய்களைத் தடுக்கும் என்று நினைக்கிறார்கள். இதில் எவ்வளவு உண்மை? எவ்வளவு உண்மையல்ல? இந்த பதிவில் இதைப் பற்றி புரிந்துகொள்ளலாம்.
குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
- குளிர்ந்த நீரில் குளிப்பதால் கண்டிப்பாக பல நன்மைகள் கிடைக்கின்றன.
- இது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது.
- குளிர்ந்த நீர் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
- இது உடலில் உள்ள சோர்வு மற்றும் வலிக்கு நிவாரணம் அளிக்கின்றது.
- இது சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது.
- குளிர்ந்த நீரில் குளிப்பது மனநிலையை மேம்படுத்துகிறது
- இது மன அழுத்தத்தையும் குறைப்பதாக நம்பப்படுகின்றது.
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை எரிக்க.... இவற்றுக்கெல்லாம் கண்டிப்பாக நோ சொல்லுங்க
குளிர்ந்த நீரில் குளிப்பதால் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் விளைவு என்ன?
குளிர்ந்த நீரில் குளிப்பது உண்மையில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துமா? குளிர்ந்த நீரில் குளிப்பது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது குறுகிய காலத்தில் நோயெதிர்ப்பு மண்டலத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துவதாக சில ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த இது மட்டுமே உறுதியான வழி என்று கூற முடியாது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கான வழிகள்
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த, குளிர்ந்த நீரில் குளித்தால் மட்டும் போதாது. இதற்கு உணவுப்பழக்கத்தில் பல விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். வைட்டமின்கள், மினரல்கள், தாதுக்கள் நிறைந்த ஒரு சீரான உணவை உட்கொள்ள வேண்டும். இதனுடன், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கமும் அவசியமாகும். இவை அனைத்தும் சேர்ந்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன.
குளிர்ந்த நீரில் குளிப்பது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். இதனால் பல நன்மைகள் கிடைக்கக்கூடும். ஆனால் இதை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் ஒரே வழி என்று கருதுவது தவறு. முழுமையான உடல் ஆரோக்கியத்திற்கு, சீரான உணவு, தினசரி உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை மிக அவசியம். ஆகையால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, குளிர்ந்த நீரில் குளிப்பதுடன், உங்கள் வாழ்க்கை முறையின் மற்ற அம்சங்களிலும் கவனம் செலுத்துவது முக்கியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தால் இந்த பழங்களுக்கு ‘நோ’ சொல்லிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ