Fatty Liver Home Remedies: நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் கல்லீரலும் ஒன்றாகும். இது நமது உடலுக்கு தேவையான பல முக்கியமான செயல்பாடுகளை செய்கிறது. ஆகையால் இதை மிக பத்திரமாக பாதுகாக்க வேண்டியது மிக அவசியமாகும். கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் அது உடலில் பல வித தீவிர பிரச்சனைகளை உருவாக்கும்.
இந்த நாட்களில் பலருக்கு கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) பிரச்சனை ஏற்படுவது மிக பொதுவானதாகி விட்டது. கொழுப்பு கல்லீரல் ஒரு தீவிர மருத்துவ நிலையாக கருதப்படுகின்றது. இதில் கல்லீரலில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது. ஆரம்ப கட்டத்திலேயே இதை கண்டறிந்தால், இதை எளிதாக சரி செய்துவிடலாம். ஆனால், இந்த பிரச்சனையை நீண்ட காலத்திற்கு அலட்சியப்படுத்தினால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு கூட அது வழிவகுக்கலாம்.
கொழுப்பு கல்லீரலுக்கான காரணம் என்ன?
தவறான உணவுப் பழக்கமும் போதுமான உடல் செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறையும் கொழுப்பு கல்லீரலுக்கு மிகப்பெரிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை சரி செய்யவும், இது வராமல் தடுக்கவும் சரியான உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வது மிக அவசியமாகும். இது தவிர ஆரோக்கியமான பழங்க வழக்கங்களை கடைபிடிப்பதும் மிக அவசியம். சில பழங்களை தவிர்ப்பதும் இதில் அடங்கும். கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத சில பழங்களை பற்றி இங்கே காணலாம்.
கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்
மாம்பழம்
மாம்பழம் (Mango) சுவையான பழமாக இருப்பதோடு இதில் பல வித ஊட்டச்சத்துகளும் உள்ளன. ஆனால், இதில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. சர்க்கரை கொழுப்பை அதிகரிக்கும் பணியை செய்கிறது, ஆகையால், கொழுப்பு கல்லீரல் நோயாளிகளுக்கு அதன் பயன்பாட்டைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... குறைவான கலோரி கொண்ட சுவையான காலை உணவு ரெஸிபிகள்
சீதாப்பழம்
கல்லீரலில் கொழுப்பு இருந்தால் சீத்தாப்பழத்தை (Custard Apple) சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், இதை ஜீரணிப்பது கடினமாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கல்லீரலின் மீதான அழுத்தம் அதிகரிக்கும். ஆகையால் இதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
உலர் பழங்கள்
உலர் பழங்கள் (Dry Fruits) ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன. ஆனால் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் இவற்றை உட்கொள்ளக்கூடாது. இவற்றை அதிகம் உட்கொள்வது கல்லீரல் அழற்சி மற்றும் கொழுப்பு கல்லீரல் பிரச்சனைகளை அதிகரிக்கும்.
லிச்சி
லிச்சியில் (Litchi) இயற்கையான சர்க்கரையின் அளவு மிக அதிகமாக உள்ளது. இது கொழுப்பு கல்லீரல் நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதை அதிகமாக சாப்பிடுவது உடல் பருமனுக்கு காரணமாவதோடு கொழுப்பு கல்லீரல் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க உதவும்... சில சூப்பர் பானங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ