)
உடல் பருமன் என்பது, இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சினையாக மாறிவிட்டது. உடல் பருமன் என்பது நோய் இல்லை என்றாலும், அது பலவிதமான கடுமையான நோய்களுக்கு காரணமாக ஆகிவிடுகிறது. எனவே உடல் எடையை குறைப்பது அவசியம். உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சியோடு, ஆரோக்கியமான உணவு முறை அவசியம் தேவை சரியான டயட் இல்லை என்றால், எவ்வளவு முயற்சி செய்தாலும் உடல் எடை குறையாது.
உடல் ஆரோக்கியத்திற்கும் உணவுப் பழக்கத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளது என்பதால், உடல் பருமனை குறைக்க நாம் என்ன உணவுகளை சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். இல்லையென்றால் தலைகீழாக நின்றாலும் உடல் எடை குறையாது.
வெள்ளை உணவுகளை தவிர்த்தல்
மைதா, சர்க்கரை, உப்பு போன்றவற்றை கவனமாக உட்கொள்வதன் மூலம், உடல் எடையை பெரிதும் (Weight Loss Tips) குறைக்கலாம். இதில் மைதா உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மைதாவில் ஊட்டச்சத்து என்பது மருந்துக்கும் இல்லை. இதில் இருப்பதெல்லாம் கலோரி மட்டுமே. மேலும் இது கடுமையான மலசிக்கலையும் ஏற்படுத்தும்.
கடுமையான டயட் தேவையில்லை
உடல் எடை குறைய, ஜிம் பயிற்சி, கடுமையான டயட் ஆகியவை தேவையில்லை. அதிலும், கடுமையான டயட் முறையை பின்பற்றாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் அதிகம். இதனால் பல ஊட்டச்சத்துகளை உடல் இழக்கும் நிலையும் ஏற்படுகிறது. உடலுக்கு எல்லா வித ஊட்டச்சத்தும் அவசியம். நமது உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவரை ஆலோசிக்காமல் நாமாக முடிவெடுத்து கடுமையான டயட்டை பின்பற்றுவது பெரும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.ஆரோக்கியமான சீரான எடை இழப்பு நிலையானதாக இருக்கும். மருத்துவரை ஆலோசிக்காமல் செய்யும் கடுமையான டயட், உங்கள் உடலை பெருமளவு பலவீனப்படுத்தி, வேறு விதமான பிரச்சினைகளையும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியத்திற்கு முதல் எதிரி. அதில் இருப்பதெல்லாம் அதிக அளவு சர்க்கரை மற்றும் செயற்கை ரசாயனங்கள். உணவுப் பொருள் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள், உடலுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். உடல் பருமனுடன், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் பிரச்சனை ஆகியவையும் ஏற்படும்
மதுபானம் அருந்தும் பழக்கம்
மது அருந்தும் பழக்கம் இருந்தால் உடல் எடையை குறைப்பது எளிதல்ல. மேலும் உயர் ரத்த அழுத்தம் நீர் அழிவு, மூளை திறன் பாதிப்பு ஆகியவை ஏற்படும் என்பதால், அதனை முற்றிலுமாக தவிர்ப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம்.
தொப்பை குறைய செய்ய வேண்டியவை
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள்
உடல் எடை குறைய நார்ச்சத்து மிக மிக அவசியம். வளர்ச்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிசம் குறைவதால், செரிமான ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே டயட்டில் நார்ச்சத்து நிறைந்த பழங்கள் காய்கறிகள் இருந்தால் எடை கண்டிப்பாக குறையும்.
மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உணவுகள்
உடல் எடையை குறைக்க, தொப்பையை கரைக்க வளர்ச்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிசம் சிறப்பாக இருக்க வேண்டும். இந்நிலையில் மெட்டபாகசத்தை அதிகரிக்கும் உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் சீரக நீர் குடிப்பதும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். சாப்பிட்ட பின் பெருஞ்சீரகம் அருந்துவதும் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ