முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா... நிபுணர்கள் கூறுவது என்ன..!!
தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது, இது ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை.
முட்டை மற்றும் கொலஸ்ட்ரால்: தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது, இது ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. உடலுக்கு தேவையான புரதம் அதில் கிடைக்கிறது. வேகவைத்த முட்டை பலரது விருப்பமான உணவாக உள்ளது. புரதத்துடன் இயற்கையான கொழுப்பும் இதில் உள்ளது. முட்டை உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே மிகவும் பிரபலமான உணவு என்றால் மிகையில்லை. ஆனால் இப்போது கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் முட்டைகளை சாப்பிடலாமா... அல்லது சாப்பிடக் கூடாதா என்ற கேள்வி எழுகிறது, ஆம் எனில், அவற்றை எந்த அளவில் உட்கொள்ளலாம் என்பதையும் அறிந்து கொள்ளலாம்
முட்டையும் கொலஸ்டிராலும்
முட்டையில் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது என்பது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்தகைய கொலஸ்ட்ரால் நமது உடலில் ஆரோக்கியமான செல்களை உருவாக்குகிறது. இதில் நிறைவுற்ற அல்லது டிரான்ஸ் கொழுப்பு இல்லை, எனவே LDL அளவு அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்காது. ஆனால், அதிக எண்ணெயிலோ, வெண்ணெயிலோ சமைத்து சாப்பிட்டால், அதனால் ஆரோக்கிய பலனுக்குப் பதிலாக பாதிப்பையே சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
முட்டை சாப்பிடுவது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதால், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது. உணவியல் நிபுணர் டாக்டர் ஆயுஷி யாதவ் இது குறித்து கூறுகையில், ஒரு நாளைக்கு 2 முட்டைகளை சாப்பிட்டால், அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை விட அதிகமாக உட்கொள்ள விரும்பினால், மருத்துவரை அணுகவும். அதிக உடற்பயிற்சி செய்பவர்கள் முட்டைகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்றார்.
மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!
நமது அன்றாட வாழ்வில் கொலஸ்ட்ரால் அளவை வேகமாக அதிகரிக்கச் செய்யும் சில உணவுப் பொருட்களை நாம் உண்கிறோம், அத்தகைய சூழ்நிலையில், இவற்றைத் தவிர்க்கத் தொடங்குங்கள். இல்லையெனில் ஆரோக்கியம் கெடும்.
1. சிவப்பு இறைச்சி- இது புரதத்தின் வளமான ஆதாரமாக இருந்தாலும், கொழுப்பும் இதில் ஏராளமாக காணப்படுவதால், குறைந்த அளவிலேயே சாப்பிடுங்கள்.
2. அதிக கொழுப்புள்ள பால்- பால் நமக்கு ஒரு முழுமையான உணவு, ஆனால் நீங்கள் அதிக கொழுப்புள்ள பாலை குடித்தால், கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.அதில் உள்ள கிரீம் நீக்கி அதை உட்கொள்ள வேண்டும்.
3. எண்ணெய் உணவுகள்- பல சமையல் எண்ணெய்கள் நம் ஆரோக்கியத்திற்கு எதிரிகள் என்பதில் சந்தேகமில்லை, அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், பல நோய்கள் ஏற்படும்.
மேலும் படிக்க | Health Alert: முட்டையுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ