Sugar: சுவையானதெல்லாம் ஆரோக்கியமானதா? இனிக்கும் சர்க்கரையின் கசப்பான மறுபக்கம்
சுவைகளில் அனைவருக்கும் அதிகம் பிடித்திருக்கும் இனிப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதா?
புதுடெல்லி: அறுசுவை உணவுகளில் சுவையான உணவு எது? இந்த கேள்விக்கு உடனடியாக வரும் பதில் இனிப்பு என்பதாகவே இருக்கும்.
ஆனால், இது ஆரோக்கியமானதா என்ற கேள்விக்கு நிபுணர்கள் சொல்லும் பதில் கொஞ்சம் கசப்பானதாக இருந்தாலும், நாவின் சுவைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆரோக்கியத்திற்கும் கொடுக்கவேண்டும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரையை அதிகம் விரும்புபவர்களால் அதை முற்றிலுமாக நிறுத்த முடியாது என்றால், அதை உணவில் இருந்து படிப்படியாகக் குறைக்க முயற்சி செய்யுங்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
அதிக அளவு கலோரிகள்
பெரும்பாலான பழங்கள், பால், சில காய்கறிகள், சீஸ் மற்றும் சில தானியங்களில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கிறது. ஆனால், பதப்படுத்தப்பட்ட மற்றும் முன்கூட்டியே சமைத்து அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுகளிலும் சர்க்கரை உள்ளது.
ஐஸ்கிரீம், குக்கீஸ், மிட்டாய், சோடா, கெட்ச்அப், தயிர் மற்றும் ரொட்டி போன்றவற்றிலும் சர்க்கரை உள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டால், அவற்றில் உள்ள கூடுதல் கலோரிகள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
ALSO READ | பணக்காரனுக்கு பாதாம், பசித்தவனுக்கு பனங்கிழங்கு! இது ஊட்டச்சத்து மந்திரம்
சர்க்கரை நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்குமா?
நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரை உங்கள் குடலில் அதிக அளவு எரிச்சலை ஏற்படுத்தி, வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளைத் தாக்குகிறது.
உணவு அல்லது பானங்களுடன் சர்க்கரையைச் சேர்த்தால், அது நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கிறது. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, நமது உடல் பலவீனமடைகிறது.
நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக போராடுவதை தடுக்கும் சர்க்கரையை தவிர்க்கலாம். பழங்கள், தானியங்கள் (Fruits and Foods) அல்லது உணவுப் பொருட்களில் உள்ள இயற்கை சர்க்கரை பாதிப்பை ஏற்படுத்தாது என்பதோடு, இவை ஆற்றலை அளிக்கின்றன.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இயற்கையாக இருக்கும் உணவுப்பொருட்களுக்கு மாற்றாக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை உண்பது அதிகரித்துள்ளது கவலைகளை ஏற்படுத்துகிறது.
சர்க்கரையின் தீமைகள்
ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே சர்க்கரையை சாப்பிட்டால், அவை தீங்கு விளைவிப்பதில்லை, உணவில் இனிப்பை சேர்த்துக் கொள்வது அவசியம், ஆனால் அதிகப்படியான அளவு சர்க்கரை தீங்கு விளைவிக்கும்.
ஆனால் கேக், பேஸ்ட்ரிகள், இனிப்புகள், சர்க்கரை பானங்கள் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இயற்கை சர்க்கரையிலிருந்து வேறுபட்ட செயற்கை சர்க்கரை
இயற்கை சர்க்கரையில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் (Health Benefits) உள்ளன, ஆனால் இவை சர்க்கரையில் இருப்பதில்லை. வெள்ளை சர்க்கரையை உணவில் சேர்க்கும் போது, அது தீமையாகிறது.
பொதுவாக இயற்கையான சர்க்கரையைவிட, செயற்கை சர்க்கரையில் அதிக சுவையூட்டப்பட்டிருப்பதால், அது கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்ணும் விருப்பம் அதிகரிக்கும்.
இது ஒரு போதை என்றே சொல்லலாம். இதனால், செயற்கையான சர்க்கரை அதிகப்படியாக நுகரப்படுகிறது. இது எடை அதிகரிப்பு, இதய நோய்கள், நீரிழிவு நோய் என ஆரோக்கித்திற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
ALSO READ | ராகியை நீங்கள் மிஸ் செய்தால் ஆரோக்கியம் உங்களுக்கு டாட்டா காட்டும்!
இது உங்கள் நோயெதிர்ப்பு செயல்பாட்டையும் பாதிக்கிறது. சர்க்கரையைச் சேர்த்து உட்கொள்வதால் மனதின் இயக்கமும் குறைகிறது. பற்களின் ஈறு நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
அதிக சர்க்கரை நுகர்வு, மன அழுத்தத்தை அதிகரிக்கும் விரைவில் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.
வயிற்று பிரச்சினைகள்
நீங்கள் சர்க்கரை உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்த முடியாவிட்டால், அதைக் குறைக்கவும், ஏனெனில் அது நமது செரிமான அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
செரிமானத்தை மோசமாக்குவதுடன், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எந்த வகையான உணவின் சத்துக்களையும் உடல் கிரகிப்பதையும் தாமதமாக்குகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | ராகியை நீங்கள் மிஸ் செய்தால் ஆரோக்கியம் உங்களுக்கு டாட்டா காட்டும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR