Masturbation: சுயஇன்பம் செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா? ஆய்வு சொல்வது என்ன?
சுயஇன்பம் என்பது மனக்கட்டுப்பாடு இல்லாததால் செய்வது என்பது பொதுவான நம்பிக்கை. இது சரியானது என்றோ, தொடருங்கள் என்றோ யாரும் கூறமாட்டார்கள். சமூக மற்றும் மத நம்பிக்கைகள் ஒருபுறம் என்றால், சுய இன்பத்தை பற்றி அறிவியல் ஆக்கப்பூர்வமான கருத்தையே சொல்கிறது
உலகெங்கிலும் உள்ள பல்வேறு சமூகங்களில் சுயஇன்பம் செய்வது தவறான பழக்கமாக கருதப்படுகிறது. ஆனால் அறிவியல் அதை ஒரு சாதாரண செயல்முறையாக கருதுகிறது. சுயஇன்பம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று சில ஆய்வுகள் காட்டுகின்றன.
சுயஇன்பம் (masturbation) என்பது மனக்கட்டுப்பாடு இல்லாததால் செய்வது என்பது பொதுவான நம்பிக்கை. இது சரியானது என்றோ, தொடருங்கள் என்றோ யாரும் கூறமாட்டார்கள். சமூக மற்றும் மத நம்பிக்கைகள் ஒருபுறம் என்றால், சுய இன்பத்தை பற்றி அறிவியல் ஆக்கப்பூர்வமான கருத்தையே சொல்கிறது.
குறிப்பாக சுய இன்பத்தில் ஈடுபடுவது மன அழுத்தத்தை நீக்குவதிலும், மனநிலையை சரி செய்வதிலும், வலியைக் குறைப்பதிலும் அற்புதமான பலனைத் தரும் என்கின்றன விஞ்ஞானபூர்வமான ஆய்வுகள். சுயஇன்பம் ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
ALSO READ | 28 மனைவிகள் முன்னிலையில் 37வது திருமணம்
மெடிகல் நியூஸ் டுடே (Medical News Today)-வின் ஒரு அறிக்கையின்படி, 2004 ஆம் ஆண்டில் நியூரோஇம்யூன்மாடுலேஷன் (Neuroimmunmodulation) என்ற சுகாதார இதழில் ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இதில் மனித உடலில் சுயஇன்பத்தின் விளைவு ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் கீழ், 11 ஆண் தன்னார்வலர்கள் (male volunteers) பங்கேற்றனர். இந்த ஆய்வின் கீழ், இந்த தன்னார்வலர்களின் முதல் ரத்த மாதிரி சுயஇன்பத்தின் போது எடுக்கப்பட்டது, பின்னர் சுயஇன்பத்திற்கு பிறகு ரத்த மாதிரி எடுக்கப்பட்டது.
இந்த ரத்த மாதிரிகள் பரிசோதனையில், ரத்தத்தில் உள்ள லுகோசைட்டுகள், லிம்போசைட்டுகள், லிபோ-பாலிசாக்கரைடுகள் (leukocytes, lymphocytes, lipo-polysaccharides) போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தின் பல்வேறு குறிப்பான்கள் (markers of the immune system) இருக்கிறதா என்பது பரிசோதிக்கப்பட்டது.
சுயஇன்பம் எப்போதாவது நோயெதிர்ப்பு மண்டலத்தின் குறிப்பான்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது என்று ஆய்வு கண்டறிந்துள்ளது. குறிப்பாக சுய இன்பத்திற்கு பிறகு, லுகோசைட்டுகள் மற்றும் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் இயற்கை உயிரணுக்களின் எண்ணிக்கை (natural cells) அதிகரிக்கிறது.
ALSO READ | 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!
இதுதொடர்பாக, ஆண்களுக்கான சுகாதார நிபுணர் டாக்டர் ஜெர்ரி பெய்லி என்ற மருத்துவரிடம் மெடிகல் நியூஸ் டுடே கருத்து கேட்டது. சுயஇன்பத்தின் போது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களானது நோய் எதிர்ப்பு உயிரணுக்களை அதிகரிக்கிறது என்று டாக்டர் ஜெர்ரி கூறினார். இந்த விளைவு ஒரு மணி நேரம் ஒரு மணி நேரம் நீடிக்கும்.
சுயஇன்பம் நீண்ட காலத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது என்று நியூ மெக்ஸிகோ மாநில பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரப் பேராசிரியர் டாக்டர் ஜெகதீஷ் குப்சந்தானி கூறுகிறார். ஆனால் இது நிச்சயமாக தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கும், துக்கத்தைக் குறைக்கும், மன அழுத்தத்தை போக்கி மனநிலையை ஆரோக்கியமாக்க உதவும் என்று கூறுகிறார்.
எது எவ்வாறாயினும், எந்தவொரு அனுமானங்களையும் இறுதி செய்வதற்கு முன் விரிவான ஆய்வு தேவை என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். வெறும் 11 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளை வைத்து எதையும் அறுதியிட்டு சொல்லிவிட முடியாது என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
அதுமட்டுமல்ல, இந்த ஆய்வில் மீண்டும் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை. வெறும் ரத்த மாதிரிகள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ளன. நோய் எதிர்ப்பு குறிப்பான்கள் திடீரென அதிகரிப்பதால் நீண்ட காலத்திற்கு நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் சொல்லிவிட முடியாது முடியாது என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
ALSO READ | உலகின் மிகப்பெரிய குடும்பம்... ஒன்றல்ல இரண்டல்ல.. 27 மனைவிகள், 150 குழந்தைகள்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR