உலகின் மிகப்பெரிய குடும்பம்... ஒன்றல்ல இரண்டல்ல.. 27 மனைவிகள், 150 குழந்தைகள்..!!!

ஒரு நபருக்கு 150 குழந்தைகள் இருப்பதாக யாராவது உங்களிடம் சொன்னால், அதை நம்ப முடிகிறதா... ஆனால் இது உண்மை. மெர்லின் பிளாக்மோர்  (Merlin Blackmore) என்ற 19 வயது சிறுவன் தனது குடும்பத்தின் இந்த ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். கனடாவைச் சேர்ந்த வின்ஸ்டன் பிளாக்மோர் (Winston Blackmore), 27 பேரை திருமணம் செய்து கொண்டு 150 குழந்தைகளைப் பெற்றுள்ளார்

டொராண்டோ: ஒரு நபருக்கு 150 குழந்தைகள் இருப்பதாக யாராவது உங்களிடம் சொன்னால், அதை நம்ப முடிகிறதா... ஆனால் இது உண்மை. மெர்லின் பிளாக்மோர்  (Merlin Blackmore) என்ற 19 வயது சிறுவன் தனது குடும்பத்தின் இந்த ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். கனடாவைச் சேர்ந்த வின்ஸ்டன் பிளாக்மோர் (Winston Blackmore), 27 பேரை திருமணம் செய்து கொண்டு 150 குழந்தைகளைப் பெற்றுள்ளார்

1 /6

கனடாவின் 64 வயதான வின்ஸ்டன் பிளாக்மோர் 27 பேரை திருமணம் செய்துள்ளார். அவருக்கு 150 குழந்தைகள் உள்ளனர். கனடாவில், அவர் பலதாரங்களை மணந்தவர் என்ற பெயரில் மிகவும் பிரசித்தமானவர்.

2 /6

குடும்பத்தின் இந்த ரகசியத்தை மெர்லினுடன் அவரது சகோதரர்கள் முர்ரே (19) மற்றும் வாரன் (21) ஆகியோர் தங்கள் கதையை உலகத்திற்கு அமப்லப்படுத்தினார்கள் என டெய்லிமெயிலின் அறிக்கை கூறுகிறது.

3 /6

தனது டிக்கெட் காக் வீடியோவில், உரையாடிய மெர்லின் தனது தந்தை பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒரு பெரிய வீட்டைக் கட்டியதாகவும், இந்த வீட்டில் அவர் தனது 27 மனைவிகளுடன் வசித்து வருவதாகவும் கூறினார். இருப்பினும்,  150 குழந்தைகள் என குடும்பம் பெரிதாகிக் கொண்டே போன போது, ​​அதே பகுதியில் பல வீடுகளை வாங்கினார் என்றார் அவர். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு மனைவிகள் மற்றும் சுமார் 18 குழந்தைகள் உள்ளனர்.

4 /6

மெர்லின் அந்த வீடியோவில், தனது சகோதர சகோதரிகள் பலருக்கு ஒரே நாளில் பிறந்த நாள் வருவதாகவும், விருந்து நடைபெற்றபோது, ​​வீட்டின் உறுப்பினர்கள் சேர்ந்தாலே பெரிய கூட்டம் ஆகி விடுகிறது என்றும் கூறினார். இருப்பினும், அனைத்து 150 உடன்பிறப்புகளும் விருந்தில் ஒன்றாக கலந்து கொள்ளவில்லை. பிறந்த நாள் கொண்டாடும் நபரின், அவரது வயதுடையவர்கள் மட்டுமே விருந்தில் ஒன்றாக கலந்து கொள்கின்றனர்.

5 /6

மெர்லின் தனது வீடியோவில் தனது குடும்பத்தைப் பற்றி நீண்ட காலமாக சொல்ல விரும்பினாலு, எல்லோரும் அவரை கேலி செய்வார்கள் அஞ்சியதால வெளிப்படுத்தவில்லை என்றார். அமெரிக்கா சென்ற பிறகு, மெர்லின் தனது குடும்பத்தைப் பற்றிய ரகசியத்தை வெளிப்படுத்தினார், மேலும் தனது சகோதர சகோதரிகளுக்கு இடையிலான வயதில் பெரிய வித்தியாசம் இருப்பதாகக் கூறினார். இவரது மூத்த சகோதரருக்கு 44 வயது, இளைய சகோதரருக்கு 1 வயது. இருப்பினும், தனது தந்தை ஏன் இவ்வளவு திருமணங்களை செய்தார் என்று தன்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்று மெர்லின் கூறினார்.

6 /6

அவரது தந்தை வின்ஸ்டன் தனது மனைவியுடன் பள்ளியை நடத்தி வருவதாக மெர்லின் தெரிவிக்கிறார். இவ்வளவு பெரிய வீட்டின் பராமரிப்பும் மிக அதிகம், அவரது தந்தை தனது வயல்களில் காய்கறிகளை வளர்க்கிறார். உருளைக்கிழங்கு-தக்காளி ஆகியவற்றை சந்தையில் இருந்து வாங்குவதில்லை. பள்ளி நேரத்திற்கு பிறகு எஞ்சியிருக்கும் நேரம், அவர்கள் விவசாயம் செய்கிறார்கள். எங்கள் சகோதர சகோதரிகள் அனைவரும் தந்தையின் பள்ளியில் படித்திருக்கிறார்கள் என்று மெர்லின் கூறினார். என் வகுப்பில் 19 குழந்தைகள் இருந்தனர், எல்லா குழந்தைகளும் அவருடைய உடன்பிறப்புகள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.