மொபைல் போன்கள் நமது வாழ்க்கையில் அத்தியாவசிய பொருள் என்ற இடத்தை பிடித்துள்ளது. அவற்றினால், நமது வாழ்க்கை மிகவும் எளிதாகிவிட்டது. அதிலிருந்து வெளிப்படும் ஒளி மற்றும் அலைகள் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. மன அழுத்தம், பாலியல் தொடர்பான பிரச்சனைகள், தூக்கமின்மை, கண் பார்வை தொடர்பான பிரச்சினைகள், மன சோர்வு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது என தொடர்ந்து ஆய்வுகள் கூறுகின்றனர். இது தவிர, மொபைல் போன்கள் மூளை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன என்றும் சிலர் கூறுகின்றனர். இந்த கூற்றில், உண்மை உள்ளதா என்ற கேள்வி பலர் மனதிலும் எழலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொபைல் போன் பயன்பாட்டிற்கும் மூளை புற்றுநோய்க்கும் தொடர்பு உள்ளதா?


உலக சுகாதார அமைப்பு 5,000 க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஆய்வுகளை நடத்தி உண்மையை கண்டறிய முயற்சி செய்தது. WHO 1994ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை மேற்கொண்ட 63 முக்கிய ஆய்வுகள் இறுதிப் பகுப்பாய்விற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. WHO நடத்திய ஆய்வில், மொபைல் போன் பயன்பாட்டிற்கும் மூளை புற்றுநோய்க்கும் நேரடி தொடர்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. வயர்லெஸ் தொழில்நுட்பத்தால் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது


ஆஸ்திரேலிய கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் அணு பாதுகாப்பு முகமை நடத்திய ஆய்வு


கடந்த இரண்டு தசாப்தங்களாக வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் அணு பாதுகாப்பு முகமை (Australian Radiation Protection and Nuclear Safety Agency - ARPANSA) தலைமையிலான குழு, வயர்லெஸ் தொழில்நுட்பத்தால் மூளை புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதா என ஆய்வு நடத்தியது. ஆய்வுகளில் மூளை புற்றுநோய் பாதிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கவில்லை என்று கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு ‘என்விரான்மென்ட் இன்டர்நேஷனல்’ (Environment International) இதழில் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | மாதவிடாய் காலத்தில் பூக்களை பெண்கள் பறிக்கக்கூடாதா? ஊறுகாய் கெட்டுபோகுமா?


க்ளியோமா என்ற கொடிய வகை மூளை புற்றுநோய்


உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய்க்கான ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (International Agency for Research on Cancer - IARC), 2011 மே மாதத்தில், வயர்லெஸ் ஃபோன் பயன்பாடு காரணமாக க்ளியோமா என்ற கொடிய வகை மூளை புற்றுநோய்க்கான ஆபத்து அதிகரித்துள்ளது என குறிப்பிட்டது. IARC வானொலி அலைகளும் 'மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக் கூடும்' என வகைப்படுத்தியது. இருப்பினும், போதுமான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வுகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


வயர்லெஸ் தொழில்நுட்பத்தினால் மூளை ஆரோக்கிய பாதிப்பு ஏற்படுமா?


சமீபத்திய WHO ஆய்வில் பங்கேற்ற முன்னணி ஆராய்ச்சியாளர் கென் கரிபிடிஸ் இது கூறுகையில், “IARC ஆய்வு செய்த தரவுகளை விட மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு, வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் இருந்து வெளிப்படும் ரேடியோ அலைகளின் வெளிப்பாடு தொடர்பு காரணமாக மனித ஆரோக்கியத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது” என்றார். மேலும் இந்த ஆய்வு விரிவான தரவுகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறிய அவர். இதன் மூலம் மொபைல் போன் பயன்பாடு மூளை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கவில்லை என்ற முடிவிற்கு இன்னும் வலு சேர்கிறது என்றார்.


மேலும் படிக்க | 50 வயதிலும் விஜய் Fit-ஆக இருக்க ‘இது’தான் காரணம்!! சீக்ரெட்டை தெரிஞ்சிக்கோங்க..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ