மாதவிடாய் காலத்தில் பூக்களை பெண்கள் பறிக்கக்கூடாதா? ஊறுகாய் கெட்டுபோகுமா?

Menstrual Myths, Women Lifestyle : மாதவிடாய் காலத்தில் பெண்கள் பூக்களை பறிக்கக்கூடாது, ஊறுகாய் தொடவே கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 5, 2024, 06:26 AM IST
  • மாதவிடாய் கால கட்டுக்கதைகளும் உண்மைகளும்
  • பெண்கள் ஊறுகாயை தொட்டால் கெட்டுப்போகுமா?
  • பூக்களை பறித்தால் அழுகிவிடும் என்பது உண்மையா?
மாதவிடாய் காலத்தில் பூக்களை பெண்கள் பறிக்கக்கூடாதா? ஊறுகாய் கெட்டுபோகுமா? title=

Menstrual Myths, Women Lifestyle : மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு என்று சில கட்டுபாடுகள் விதிக்கப்படுகின்றன. அவை நாடு முழுவதும் இருக்கும் பெரும்பாலான மக்கள் பின்பற்றி வருகின்றனர். இளம் வயதில் பெண்கள் மாதவிடாய் தொடங்கும் நேரத்தில் இருந்தே இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் பெரியவர்கள் சொல்லி கொடுக்கின்றனர். 5 நாட்கள் பெண்கள் வீட்டிற்குள் வரக்கூடாது, வீட்டிற்கு வெளியே ஒதுக்குபுறமாக இருக்கும் இடத்தில் தங்கிக் கொள்ள வேண்டும், சமையலறைக்குள் செல்லவே கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. இதுமட்டும் இல்லாமல், மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் உறுகாய் தொடவே கூடாது. அவர்கள் தப்பித்தவறி ஊறுகாயை தொட்டுவிட்டால், பாட்டில் முழுவதும் இருக்கும் ஊறுகாய் கெட்டுப்போகும் என்ற கற்பிதங்கள் எல்லாம் இருக்கின்றன. 

செடிகளை தொட்டால் செடிகள் அழுகிவிடும். ஒரு செடியில் இருக்கும் பூவை தொட்டாலே அந்த செடியில் இருக்கும் எல்லா பூக்களும் அழுகி கொட்டிவிடும் என்றும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இந்த விதிமுறைகளுடன் மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் வீட்டிற்கு வெளியே தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறார்கள். கிராம்பபுறங்களில் மட்டுமல்லாது நகரப்பகுதிகளில் வசிக்கும் பெண்களும் இந்த விதிமுறைகளை எல்லாம் பின்பற்ற வேண்டும் என வீட்டில் இருக்கும் பெரியவர்களால் கடிந்து கொள்ளப்படுகிறார்கள். ஆனால் இவற்றின் உண்மை என்ன?, எல்லாமே கட்டுக்கதைகளா? என்பதை தெரிந்து கொள்வோம். 

மேலும் படிக்க | 50 வயதிலும் விஜய் Fit-ஆக இருக்க ‘இது’தான் காரணம்!! சீக்ரெட்டை தெரிஞ்சிக்கோங்க..

மாதவிடாய் விழிப்புணர்வு

மாதவிடாய் காலங்களில் உடலில் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். இதன் காரணமாக, தொற்று மற்றும் நோய்களின் ஆபத்து பெண்களுக்கு அதிகரிக்கிறது. இந்த காலகட்டத்தில், தூய்மையாக இருப்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பழங்காலத்தில், ரத்தப்போக்கை கட்டுப்படுத்த துணிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இப்போது காலம் மாறி மாதவிடாய் குறித்து பெண்கள் விழிப்புடன் இருக்கின்றனர். உடல் நலனிலும் அக்கறை செலுத்திக் கொள்கின்றனர்.

மாதவிடாய் கட்டுக்கதைகள்

மேலே சொன்னதுபோல் பெண்கள் வீட்டிற்குள்ளே நுழையக்கூடாது, தனிமைப்படுத்த வேண்டும் என்பது கட்டுக்கதைகளே. செடியை தொடக்கூடாது, பூக்களை பறிக்கக்கூடாது என்பதும் ஒருவிதமான புனைவுக் கதைகள் தான். அதேபோல், ஊறுகாய் தொடக்கூடாது என்பதும் கட்டுக்கதை தான். உண்மையில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஊறுகாய் எடுத்துக் கொள்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். ஏனென்றால்,ஊறுகாய் சாற்றில் சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் அதிக அளவில் உள்ளன. இது தசைப்பிடிப்பைக் குறைக்க உதவும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தேவையான ஆற்றலை வழங்கக்கூடிய ஒன்று தான். எனவே, கட்டுக்கதைகளை நம்பி உடல்நலனைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். 

மேலும் படிக்க | சுய இன்பம் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News