நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அலட்சியம் வேண்டாம்...
Vitamin B12 Deficiency: நம் உடல் சீரான செயல்பாட தேவையான அத்தியாவசியமான ஊட்டசத்துக்களில் ஒன்று வைட்டமின் பி12. இதன் குறைபாடு, நரம்பு மண்டல் பாதிப்பு உட்பட, பல தீவிர உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
Vitamin B12 Deficiency: நம் உடல் சீரான செயல்பாட தேவையான அத்தியாவசியமான ஊட்டசத்துக்களில் ஒன்று வைட்டமின் பி12. மருத்துவ மொழியில், சயனோகோபாலமின் என அழைக்கப்படும், வைட்டமின் பி12 ஊட்டச்சத்தினை உடல் உற்பத்தி செய்யாது என்பதால், டயட்டின் மூலம் தான் இதனை பெற முடியும். இதன் குறைபாடு, நரம்பு மண்டல் பாதிப்பு உட்பட, பல தீவிர உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, டிஎன்ஏ மற்றும் இரத்த சிவப்பணுக்கள் உருவாகவும் வைட்டமின் பி12 தேவை. மூளை மற்றும் முதுகுத் தண்டு வளர்ச்சியிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இதுமட்டுமின்றி, முடி, நகங்கள் மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் இந்த வைட்டமின் தான் காரணமாகும்.
வைட்டமின் பி 12 நீரில் கரையக்கூடியது. மிக முக்கியமாக இறைச்சி, மீன், முட்டை போன்ற பால் பொருட்களில் காணப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டியது (Health Tips) அவசியம்.
வைட்டமின் பி12 குறைபாடு உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள்
நரம்பு மண்டல செயல்பாடு
வைட்டமின் பி12 ஊட்டச்சத்தின் குறைபாடு நரம்பு மண்டலத்தில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இது கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு, பலவீனம், நடப்பதில் சிரமம், குழப்பம் உள்ளிட்ட நரம்பியல் கோளாறுகள் ஏற்பட வழிவகுக்கிறது. வைட்டமின் பி12 குறைபாடு நீண்டகாலத்திற்கு இருந்தால் நரம்பு செல்களுக்கு நிரந்தர சேதத்தை கூட ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
மன ஆரோக்கியம்
வைட்டமின் பி12 குறைபாடு மனநலத்தையும் பாதிக்கிறது. அதன் குறைபாடு மனச்சோர்வு, பதட்டம் மற்றும் மனநல பிரச்சனைகளை ஏற்படுத்தும். வைட்டமின் பி 12 குறைபாடு நீண்ட காலமாக நீடித்தால், அது மூளையின் செயல்திறனை நிரந்தரமாக பாதிக்கும். இது நினைவகம், கவனம் மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளை பாதிக்கும்.
சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தி
வைட்டமின் பி12 இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இல்லாமல், உடலில் இரத்த சிவப்பணுக்கள் (RBCs) உற்பத்தி குறைந்து, இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இதனால், பாதிக்கப்பட்ட நபர் தீவிர சோர்வு, பலவீனம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வைட்டமின் பி 12 குறைபாடு மெகாலோபிளாஸ்டிக் அனீமியாவையும் ஏற்படுத்தும். இதில், இரத்த அணுக்கள் இயல்பை விட பெரியதாகவும் அசாதாரணமாகவும் மாறுகின்றன.
ஆற்றல் நிலை
உடலில் ஆற்றல் உற்பத்திக்கு வைட்டமின் பி12 இன்றியமையாதது. இது உணவில் இருந்து ஆற்றலைப் பிரித்தெடுத்து உடலுக்கு ஏற்ற பயனுள்ள வடிவமாக மாற்ற உதவுகிறது. வைட்டமின் பி 12 இன் குறைபாடு சோர்வு, பலவீனம் மற்றும் ஆற்றல் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. இது பலவீனம் மற்றும் மன சோர்வை ஏற்படுத்தும்.
செரிமான ஆரோக்கியம்
வைட்டமின் பி12 இன் குறைபாடு செரிமான அமைப்பிலும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. வைட்டமின் பி 12 இன் நீண்டகால குறைபாடு ஜீரண உறுப்புகளை வலுவிழக்க செய்வதால், உடலால் ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்ச முடியாது. இதனால், ஊட்டச்சத்து குறைபாடு வயிற்று எரிச்சல், குமட்டல், மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடையை எளிதாக குறைக்கணுமா? உங்களுக்கு உதவும் மஞ்சள் காபி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ