Do's And Don'ts In Gym : நம்மில் பலருக்கு, உடல் எடை அதிகமாக இருப்பது ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கலாம். நம்ம ஊரில் மட்டும்ல்ல, உலகளவில் பல லட்சம் பேர் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர். மாறி வரும் வாழ்க்கை சூழல்கள், ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கம், உடல் நலக்கோளாறுகள், நாள்பட்ட நோய் பாதிப்புகள் அகியவற்றால் நமக்கு உடல் எடை அதிகரிக்கலாம். இதைக்குறைக்க, சிலர் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வர், இன்னும் சிலர் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வர். இதனால் உடல் எடை குறைவது/அதிகரிப்பது மட்டுமன்றி, உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ளலாம். உடற்பயிற்சி கூடத்தில் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? இங்கு அது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்டியோ உடற்பயிற்சிகள்:


உங்கள் உடற்பயிற்சிகளை முதலில் கார்டியோவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். எடுத்தவுடன் வெயிட் ட்ரெயினிங் செய்ய இறங்கிவிடக்கூடாது. த்ரெட்மில்லில் 15-20 நிமிடங்கள் நடப்பது, படி ஏறுவது போன்ற கார்டியோ உடற்பயிற்சிகளின் மூலமாக ஆரம்பிக்கலாம். உங்கள் உடல், உடற்பயிற்சி நிலைக்கு வந்த பிறகு பிற உடற்பயிற்சிகளை செய்யலாம். 


வெயிட் ட்ரெயினிங்:


இதற்கு பின்னர், நீங்கள் வெயிட் ட்ரெயினிங் பயிற்சிகளை செய்ய ஆரம்பிக்க வேண்டும். புஷ்-அப்ஸ், ஸ்குவாட் உள்ளிட்டவை அது போன்ற உடற்பயிற்சிகளுள் அடங்கும். ஒவ்வொரு உடற்பயிற்சிகளையும் 10-15 ரெப்ஸ், 2 முறை செய்ய வேண்டும். முதலில் அனைத்து உடற்பயிற்சிகளையும் பொறுமையாக செய்து பழக வேண்டும், நாட்கள் செல்ல செல்ல வேகத்தை அதிகரித்துக்கொள்ளலாம். 


வார்ம்-அப் உடற்பயிற்சிகள்:


ஜிம்மில் உடற்பயிற்சிகளை முடித்த பிறகு, உடலை நீட்டி-மடக்கி ஸ்ட்ரெட்ச்சிங் செய்வதும் மிகவும் முக்கியமாகும். ஏனென்றால் நீங்கள் கார்டியோ மற்றும் வெயிட் ட்ரெய்னிங் செய்தவுடன் தசைகள் இறுக்கமாகலாம், வலிகளும் ஏற்படலாம். இவற்றை தவிர்க்க, இதை செய்ய வேண்டும். 


மேலும் படிக்க | உடல் எடை குறையும்..இரவு உணவு சாப்பிட்ட பின்பு இந்த ஸ்நாக்ஸை சாப்பிடுங்க


சுத்தம்:


உடற்பயிற்சி கூடம் மட்டுமன்றி, எங்கு சென்றாலும் சுத்தமும் சுகாதாரமும் மிகவும் முக்கியமாகும். ஜிம்மிலும் நீங்கள் இதை கடைப்பிடிக்க வேண்டும். உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும் போது, கண்டிப்பாக டவல் மற்றும் தண்ணீர் பாட்டிலை கையோடு கொண்டு செல்ல வேண்டும். நீங்கள் உடற்பயிற்சி செய்து முடித்த பின்பு உங்கள் உடலில் இருந்து வரும் வியர்வையால் பிறருக்கோ, அல்லது அவர்கள் உடலில் இருந்து வெளியேறும் கிருமியால் உங்களுக்கோ உடல் நலக்கோளாறுகள் ஏற்படலாம். எனவே, இவற்றை தவிர்க்க உங்களுடன் ஒரு துண்டை வைத்துக்கொள்ளுங்கள்.


வெளியில் பயன்படுத்தும் ஷூக்களை, ஜிம்மிற்குள் பயன்படுத்த வேண்டாம். தனியாக பையில் ஷூவை கொண்டு வந்து, உடற்பயிற்சி கூடத்தில் அணிந்து கொள்ள வேண்டும். 


கண்ணாடி முன் நின்று உடற்பயிற்சி செய்தல்:


அனைத்து உடற்பயிற்சிகளிலும், சுற்றிலும் கண்ணாடி அமைக்கப்பட்டிருக்கும். உடற்பயிற்சி செய்பவர்கள், அவர்களை பார்த்து ஒழுங்காக உடற்பயிற்சி செய்கிறார்களா இல்லையா என்பதை கவனிக்கவே இந்த கண்ணாடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உடற்பயிற்சியை கண்ணாடி பார்த்து செய்வதுதான் சரியான முறை என்றாலும், ஒரு சிலருக்கு கண்ணாடியை பார்த்து உடற்பயிற்சி செய்வது சங்கோஜமாக இருக்கும். அருகில் இருப்பவர்கள் கண்ணாடியை பார்த்து உடற்பயிற்சி செய்வதும் கூட அவர்களுக்கு வித்தியாசமாக தோன்றும். நீங்கள் அப்படிப்பட்டவர்களில் ஒருவர் என்றால், கண்ணாடி பார்த்து உடற்பயிற்சி செய்யாதவர்கள் இருக்கும் மூலைக்கு சென்று உடற்பயிற்சி செய்யலாம். 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வெயிட் லாஸ் பண்ணனுமா? இந்த கோல்டன் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க-வெற்றி நிச்சயம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ