வெயிட் லாஸ் பண்ணனுமா? இந்த கோல்டன் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க-வெற்றி நிச்சயம்!

Golden Rules Of Weight Loss : உடல் எடையை குறைப்பது என்பது, நாம் வெளியில் இருந்து பார்க்கும் அளவிற்கு எளிதான விஷயம் அல்ல. இதற்கென்று நாம் பல்வேறு முன்னெடுப்புகளையும் முயற்சிகளையும் எடுக்க வேண்டி இருக்கிறது. அதற்கென்று சில ரூல்ஸ்களும் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 

Golden Rules Of Weight Loss : இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் உடல் பருமனால் பல கோடி பேர் அவதிப்பட்டு வருகின்றனர். வாழ்வியல் சூழல்கள், ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், உடல் நல பிரச்சனைகள் உள்பட பல காரணங்களால் உடல் எடை அதிகரிக்கலாம். இதனால் இருதய கோளாறுகள், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். உடல் எடையை, ஹெல்தியான வகையில் குறைக்க சில கோல்டன் ரூல்ஸ்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 

1 /8

உடல் எடையை குறைப்பதற்கான கோல்டன் ரூல்ஸ்..முழுசா படிங்க..

2 /8

சர்க்கரை அல்லது இனிப்பு சம்பந்தப்பட்ட உணவுகளை சேர்த்துக்கொள்வதை தவிருங்கள். செயற்கை பானங்களில் இருந்து, இனிப்பு பலகாரங்கள் வரை அனைத்தையும் தவிர்த்து விடுங்கள்.

3 /8

6 முதல் 8 மணி நேரம் தூங்குவதை கட்டாமாக்க உங்கள் உடலை பழக்கிக்கொள்ளுங்கள். மன அழுத்தம், சோர்வு காரணமாக கூட உடல் எடை கூடலாம். இவற்றை நல்ல தூக்கத்தால் மட்டுமே தவிர்க்க முடியும். 

4 /8

உடல் எடையை குறைப்பதற்கான முதல் படி, துரித உணவுகளை தவிர்ப்பதாகும். எனவே, அதிகமாக ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.

5 /8

பசி இருக்கும் போது நாம் நம்மையே அறியாமல் நமக்கு தேவையான அளவை விட அதிகமாக சாப்பிட்டு விடுகிறோம். ஆனால், ஃபைபர் உணவுகளை சாப்பிடுகையில் நமக்கு வயிறு முழுமையான உணர்வு கிடைக்கும். எனவே ஃபைபர் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

6 /8

கொழுப்பை குறைப்பது மிகவும் முக்கியமாகும். எனவே, எண்ணெய் சேர்க்காத உணவுகள், உப்பு அதிகம் இல்லாத உணவுகளை உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டும். 

7 /8

தினமும் உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை எப்படி குறைக்க முடியும்? எனவே, 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். வாக்கிங், ஜாக்கிங், வீட்டு உடற்பயிற்சிகள் கூட உபயோகமானதாக இருக்கும். 

8 /8

உடல் எடையை, சாப்பிடாமல் இருப்பதால் குறைக்க இயலாது. எனவே, 3 வேலையும் உணவை சரியாகவோ, அல்லது பல வேலைகளாக பிரித்தோ சாப்பிடலாம்.  (பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)